Skip to main content

நான் யார்? -பகுதி - 9

இருட்டு வெளிச்சத்துடன் சண்டையிட்டது. வெளிச்சமென்பது தற்காலிகமானது. விடியும் வரை இருள் ஆள்கிறது, விடிந்தபின் வெளிச்சம் தன் ஆதிக்கத்தைச் செலுத்துகிறது என்றபோதும் இருள் மனித மனங்களில் சென்று ஒழிந்து கொள்கிறது. மிகுந்த போரட்டத்திற்க்கு பிறகுதான் தெளிவடைய ஆரம்பித்தது. யாரோ உதைத்த பந்து அந்தரத்திலேயே நின்றது. வெள்ளை நிற வேட்டி, சட்டை, துண்டுகளை காய வைத்திருந்தனர். இமைகள் மெதுவாக திறந்து கொள்வதை உணர்ந்தேன். பேரிரைச்சல் ஒன்று என்னுள் நிலவிய அமைதிக்கு குந்தகம் விளைவித்தது. கஸ்டப்பட்டு கண்களை அகல விரித்தேன். சரக்குகளை ஏற்றிக்கொண்ட லாரியோன்று கடந்து சென்றது. திசைகளற்ற, காலமில்லா இருளுக்குள் தத்தளித்து, திடுமென தூக்கி வெளிச்சத்தில் எறிந்தது போல் இருந்தது என் விழிப்பு. பிறகு சில நொடி களித்துதான் சுயநிலை தெரியத்துவங்கியது. மெல்ல கைகளை ஊன்றி எழுந்தேன். விடுபட்ட நினைவுகளை ஒட்ட வைக்க முயன்று முடியாமல், சுற்றும் முற்றும் விழித்தேன். சாலையோர திட்டில் படுக்க வைக்கப்பட்டிருப்பது தெரிந்தது.
யாருடா இவன் என்னோட இடத்தில் படுத்திருக்கிறான் என்பதைப் போல கண்களை இமைக்காமல் பார்த்தது, பக்கத்தில் படுத்திருந்த தெரு நாய் ஒன்று. இல்லை, இல்லை நீ என்னோட இடத்தில் படுக்கக் கூடாது என்பதைப் போல தலையை இட வலமாக ஆட்டியத் தொடங்கியது. நான் அதன் கண்களையே உற்று நோக்கியவாறு இருந்தேன்.
நா சொல்றத கேட்க்கமாண்ட? அதன் பற்க்களைக் காட்டி மிரட்டியது. பயத்தில் எழுந்து கொண்டேன். நாய் தன் இடத்தை தக்கவைத்தது.
வேறு வழியின்றி நடந்தேன். பாதசாரிகள் என்னை விட்டு விலகி விலகி சென்றனர். எங்கே போகிறோம், எங்கே இருக்கிறோம் புரியாத அவஸ்தையாய் இருந்தது. ஏன் எல்லோரும் விலகிச் செல்கிறார்கள்? மேலும் குழப்பம். அதுவரை என்னைச் சுற்றி என்ன இருக்கிறது, எப்படி இருக்கிறது என்றேல்லாம் பார்த்த நான் என்னை கவனிக்கத் தவறிவிட்டேன்.  முதலில் என் வலது கைச் சட்டையை பார்த்தேன். நீளமாய் கிழிக்கப்பட்டு அதனுடே என் உடல் தெரிந்த்து. அடடே! என்று என்னை முழுவதும் ஆராய்ந்தேன். என் உடலின் வெகு சில பகுதிகளை மட்டுமே அது மறைத்திருந்தது ஏனைய பகுதிகளேல்லாம் பார்வைக்காக திறந்துவிடப்பட்டிருந்தது. என்னைக் கடந்து சென்ற லாரி உபயமாக கொஞ்சம் மணலைக் கொட்டிவிட்டுப் போயிருந்தது. என் நிலையை சுறுக்கமாகச் சொன்னால் அலங்கோலம்.
புரியாத எழுத்துக்கள் கடை போர்ட்டில் நிறைந்திருந்தது. செய்வதறியாது போர்ட்டையே பார்த்து நின்றேன். கடை ஓனர் பணியாளிடம் என்னைக் கைகாட்டி ஏதோ சொன்னார். இதற்க்கு மேல் என்ன நடக்கும் என்பது தெரியும். மீண்டும் நடக்கத் தொடங்கினேன். யாரோ ஒருத்தர் தொடர்ந்து என்னைத் துரத்திக் கொண்டே இருந்தார்கள்.
தலை கின்னேன்று இருந்தது. லேசாக பூமி சுற்றியது. அந்திரத்தில் மிதப்பது பந்தில்லை என்றும், காயங்களுக்கு விசமிடம் சுட்டெரிக்கும் சூரியன் என்றும் தெரிந்தது. கொஞ்ச தூர நடையிலும், இடைவிடாத தேடுதலிலும் ஆங்கில எழுத்திலுல்ல கடை போர்டையும் கண்டுகொண்டேன். சிக்மங்களுர், கர்நாடகம் என்று போட்டிருந்தது.
எப்படி இங்கே வந்தேன்? நான் யார்? தொடர்ந்து என்னுள்ளே கேள்விகள் துளைத்தன. ஒருவேளை பைத்தியமாக இருந்து, தெளிந்துவிட்டேனா? இல்லை தெளிவாக இருந்து, பைத்தியமாகிவிட்டேனா? பைத்தியம் பிடித்தால் இப்படித்தான் யோசிப்பார்களோ? ஆம் நான் பைத்தியம் தான். அதனால்தான் எல்லோரும் என்னைக் கண்டு பயந்து விலகிப் போகிறார்கள். மனம் தள்ளாடியது.
போர்ட்டை பார்த்து நடந்ததால், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மேல் முட்டிக்கொண்டேன். நல்ல வேளை யாரும் அந்தக் காரில் இல்லை. ஏற்க்கனவே காயம்பட்டிருந்த என் கால் முட்டி இப்போது இரத்தத்தை கொட்டியது. வழி தாலாமல், என் முழங்காலை பிடித்தேன். சிறிது நேரம் அதே நிலையில் நின்றிருந்தேன். அடிவயிற்றில் இலேசாக மின்னல் வெட்டியதைப் போல் உணர்ந்தேன். அது வலியாக உருமாறியது. ஒரு கையால் வயிற்றையும் பிடித்துக்கொண்டேன். வலி நேரமாக ஆக அதிகரித்தது. வலியைப் பொறுக்க முடியாமல், குனிந்திருந்த நான் தலையை மட்டும் உயர்த்தி வானத்தைப் பார்த்தேன். தரையிலுல்ல ஜிவன்ங்களும், ஜிவ ஆத்மாக்களும் தான் உதவாது. நீயும் கூடவா என்பதைப் போல வானத்தைப் பார்த்தேன். இவர்களையாவது காண முடியும் ஆனால் நீ மட்டும் தெரியப்போவதில்லை பிறகெங்கே உதவி கேட்ப்பது. வலி தாலாமல் மீண்டும் தலையை சாய்த்தேன். நீண்ட தாடி, முகமே தெரியாத வகையில் மூடியிருந்தது. தலை முடியெல்லாம் எண்ணேயே பார்க்காமல் சூம்பிக் கிடந்தது. சட்டென பின்புறம் திரும்பிப் பார்த்தேன் யாருமில்லை. கார் கண்ணாடியில் அந்த உருவத்தை மறுபடியும் உற்றுநோக்கினேன். அது என்னைத்தான் காட்டியது. நானா அது? திடுமென என் பழைய உருவ நினைப்பு என் மனச்சித்திரத்திலிருந்து வெளிவந்தது. திகைப்பில் நான் வலியையெல்லாம் மறந்துவிட்டேன். என் உருவத்தின் மீது நான் கொண்டிருந்த எல்லாம் சுக்கு நூறானது. இது வேறு யாரோ, நான் இல்லை. அது எப்படி கண்ணாடி தவறாகக் காட்டும்? அப்படியானால் இந்த உருவம் என்னுடையதுதானா? அப்படி என்றால் பழைய உருவம் என்னாயிற்று? அப்படியானால் நான் யார்? அந்த உருவமா? இப்படி எண்ணூகிறேனே இந்த நினைப்பா? என்னை மண்ணில் அடையாளப்படுத்தும் பிறப்பினுடே வந்த அடையாளமா? எது? எது? நான் யார்?        

Comments

Popular posts from this blog

யாதும் காமமாகி நின்றாய்

எங்கோ சூரியன் தொலைந்து போய்க்கொண்டிருந்தான். நானும் தான். குவித்து வைத்த உள்ளங்கை போல ஏரியின் கரை கவிழ்ந்து கிடந்தது. அதன் கரையேல்லாம் காப்பிச் செடிகள் வளர்ந்திருந்தன. ஏரியின் நீர், கண்ணின் வெள்ளைப் பாவை போல தோன்றிற்று. முடிவிலா வானம் அந்த கண் வழியே தெரிந்தது. பச்சை நிற கண் இமைகளோ அந்த காப்பிச் செடிகள் என்று தோன்றிற்று. அது மலையின் கண், அதனாலோ என்னவோ இவ்வளவு பெரியதாய் நீண்டு கொண்டு போகிறது. தொலைதூரத்தில் ஆரம்பித்த வழி அந்த ஏரியை சுற்றி நாங்கள் தங்கியிருக்கும் பஞ்சாயத்து போர்ட் ஆபிஸ் கெஸ்ட் கவுஸ்ஸில் முட்டி நின்றது. பச்சை நிற மரங்கள் நிறைந்து கிடக்கும் மேகமலையில் அந்த ஒத்தை அடி பாதை மட்டும் வெள்ளை நிறத்தில் ஒரு கோடு போட்டது போல, நாங்கள் உட்காந்திருக்கும் மொட்டை மாடியில் இருந்து பார்க்கும் போது தெரிந்தது. நிச்சயமாய் அது நெற்றியில் இட்ட திருநீருதான். ஆனால் அது ஒரு எல்லைக் கோடு மாதிரியும் தோன்றிற்று. அதன் பின்னால் மலை உயர்ந்து கொண்டே போயிற்று.  அதுநாள் வரை காற்று அப்படி இனிக்கும்மென்று தெரியவில்லை. எத்தனை மலர்களை காற்று தழுவியிருக்கும், இலைகளில் இளைப்பாறியிருக்கும்?  சில சமயம் அவளது நான்

அமுதம்

  இது என்னில் மிக பாதிப்படைய வைத்த கதை. இதைப் பற்றி எழுத அல்லது தொகுத்துக்கொள்ள முடியவில்லை. காரணம் கதை பல தளங்களில் விரிந்து செல்கிறது. முதல் தளம் மற்றும் எனக்கு முக்கியமான தளம் என்பது காமம் சார்ந்தது. அன்னை ஒரு பக்கம் என்றால் மனைவி மறுபக்கம். இருவருக்கும் இடையில் இருக்கும் புள்ளி காமம் இல்லாத பூஞ்யம் என கொள்வோம். மனைவி பக்கம் வரவர காமத்தின் அளவு ஏறிக்கொண்டே போகிறது. மறு எல்லையில் அது கருணையாக/அன்பாக/பாசமாக ஏறிக்கொண்டே போகிறது. நன்றாக யோசித்துப்பார்த்தால் அடிநாதம் காமம்தான். மனைவி அன்னையாகும் தருணம் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆணின் மனம் குழம்பும். இவளை எந்த இடத்தில் வைப்பது? அன்னையின் பக்கமா இல்லை மனைவியின் பக்கமா? எல்லா ஆண்களிடமும் இருக்கும் இந்த பிரச்சனை. ஒருவேளை அன்னைக்கும் மனைவிக்குமான மனப்போரட்டமாகவே ஆணின் வாழ்க்கை முழுவதும் இருக்கும்(காமத்தைச் பொருத்தவரை). இரண்டாவது தளம் நேர்மறையான செயல்களை செய்பவர்கள் மேலான சந்தேகம். சாதாரண மனிதர்களுக்கு இந்த சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும். மனித மனம்  எளிதாக எதிர்மறையான விசயங்களை நோக்கி செல்லும். கருணை, தன்னை சமூகத்துக்காக சமர்பித்தல் போ

மியாவ் மியாவ்

கருப்பணசாமி, சிலை செஞ்சு வச்சுப்போடறன். இந்த சீவன காப்பாத்து என கண்களை மூடி மேற்க்கே பார்த்து வேண்டிக் கொண்டாள் எங்கள் ஆத்தா. பக்கத்தில் பூனை பக்…பக்….கென்று கக்கிக் கொண்டிருந்தது. அதன் கழுத்தை யாரோ அழுத்திக் கொண்டது போல அது கக்கியது. அப்போதுதான் நான் பள்ளிக்கூடத்திலிருந்து வந்திருந்தேன். பூனை கத்தற சத்தமும், ஆத்தா சாமி கும்பிடற சத்தத்தையும் கேட்டு பொடக்காளிக்கு வந்தேன். கண்களை திறந்த ஆத்தா கையிலிருந்த திருநீரை வீசி பூனையின் மேல் எறிந்தாள், பிறகு அதன் நெற்றியில் பூசிவிடப் போனதும் அது பயந்து ஓடிப்போனது. சும்மா இல்லாத, இந்த கெரகம்…….என்று அதை திட்டிக்கொண்டு என்னை பார்த்தவாறு ஆசாரத்திற்க்கு நகர்ந்தாள். எனக்கும் ஆத்தாவிற்க்கும் முந்தானேத்து பயங்கர சண்டை அதனால் பேச மாண்டாள். நான் சிறிது நேரம் அங்கேயே நின்றிருந்துவிட்டு ஏதோ பூனைக்கு உடம்பு சரியில்லைனு நினைத்துக்கொண்டேன். இரா தூங்கும்போது மூங்கில் விட்டத்துக்கும், முகட்டு ஓடுக்கும் நடுவுல இருக்கிற இடைவெளியில மெதுவாக தன்னோட கால எடுத்து வச்சு நகரும். ஆத்தா அங்க பாரு பூனை கத்துது. டேய்… சும்மா கிடக்கமாண்ட. அது கத்துனா கத்துது உனக்கென்ன? எ