Skip to main content

Posts

Showing posts from January, 2021

மோக முள் பற்றிய எனது புரிதல்கள்

வணக்கம் குருவுக்கு, தாங்கள் நலமா? இன்று மோக முள் படித்து முடித்தேன். உடனே அதனை பற்றி எழுதிவிட நினைத்ததன் விளைவு இந்த கடிதம். பிரமிள் ஒரு கட்டுரையில் காமம் தான் அடிப்படையான சக்தி, அதுதான் ஒருவனைக் கலைஞனாக்குகிறது (கவிஞனாக்குகிறது) என்கிறார். எனக்கு அப்போது இருந்த எண்ணம் காமம் வேறு, கலைகளைப் படைக்கும் சக்தி என்பது வேறு. முன்னது பாவமானது, பின்னது புனிதமானது. ஆனால் இந்த வேள்வி பல நாட்கள் என்னுள் இருந்து கொண்டிருந்தது. தனிப்பட்ட முறையில் சுதர்ம்மா பற்றித் தேடிக்கொண்டிருக்கிற எனக்கு இது முக்கியமான கேள்வியாக இருந்தது. ஏன் ராஜத்திற்க்கோ அல்லது அவனது கல்லூரியில் படித்த அவனது வயதை ஒற்றிய பையன்களுக்கோ பாபுவைப் போலத் தடுமாற்றம் இல்லை. ராஜம் மிகத் தெளிவான முன் முடிவுகளோடு இருக்கிறான். பெண்களை மனதில் வைத்துப் பூசிக்கிறான். பாலு தன் பூத்துக் குலுங்கும் காமத்தை அடக்க முடியாமல் தவிக்கிற ஆளாக இருக்கிறான். ஒரு பக்கம் ராஜத்தைப் போலப் பெண்களைப் பூஜிக்க முயலுகிறான், மறுபக்கம் தங்கமாளுடன் உறவும் கொள்கிறான். இது எல்லா மனிதர்களுக்குமான தவிப்பாய் இருந்தாலும், பாலுவுக்கு மித மிஞ்சி இருப்பது அவன் கலைஞனாக இருப்ப

வாசகர் கடிதம்: முதற்கனல் - வெண்முரசு

முதற்கனல் நாவலை படித்ததும் எழுதும் கடிதமிது. நாவலின் அமைப்பு இதற்க்கு முன் பழக்கம் (எனக்கு) இல்லாத ஒன்றாக இருந்தது. கதைக்குள் கதை. மேலும் வரலாறு ஒருவகை தொன்மாக முன் வைக்கப்படுகிறது. அதன் மாயங்களை எல்லாம் நிகர் கால வராலாற்று கருவிகளால் விலக்கி தட்டையாக்காமல், இன்னும் மாயங்களாகவே முன் வைப்பது ஆனந்தமாக இருந்தது. மனிதன் தொடர்ந்து எல்லாவற்றையும் பகுத்து தன் அறிவுக்கு உட்ப்பட்டதாக மாற்றுகிறான்.அது நல்ல விசயம்தான், அதே சமயம் அவனது வாழ்க்கை இப்படித்தான் என முன்னரே வகுத்துவிட்டால் எப்படி இருக்கும்? நிச்சயம் சலித்துப் போவான். அப்படி வரலாற்றையும் பகுத்து, ஐயம் திரிபுர சொல்லிவிட்டால்? நிச்சயம் கொடுமை. கற்ப்பனைக்கு வழி இல்லாமல் மனிதன் தற்க்கொலை செய்யவும் நேரலாம். நல்ல வேளை அது நடக்கவில்லை என்பது மகிழ்ச்சி. நான் மகாபாரதக்கதையை முழுவதும் அறிந்தவனில்லை. முதற்கனலில் கதை எனக்கு புதிது. அம்பையின் கண்ணீர் சிகண்டியின் வழி முதற்கனல் ஆனது. எனக்கு தெரிந்து ஆண்கள் நீர்நிலையின் மேல்தளத்தை போன்றவர்கள். மேலோட்டமாகப் பார்க்க அவர்கள் வீரர்களாகவும், புரட்சிக்காரர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களை வழிநடத்தும் ஆழ்

கலைஞன் - சிறுகதை

சர்மா வெற்றிலையை தன் வாயில் அடக்கவும் காதர் எங்கள் அறைக்குள் வரவும் சரியாக இருந்தது. இருந்த ஒரு படத்தையும் ஸ்டுடியோ முடித்துவிட்டதால், அடுத்த வேலைக்காக காத்துக்கொண்டிருக்கிறோம். உடனே வரும் என்று தோன்றவில்லை. ஒரு வகையில் சும்மா உக்காந்து சம்பளம் வாங்கிக்கொண்டு போகலாம்தான். ஆனால் அதுவே வருடக்கணக்கானால், சும்மா இருப்பதைப் போன்ற ஒரு சுமை வேறு இருக்காது. எங்கள் லன்ச் டைம் முடிந்ததும் தூக்கம் போடாமல் இருக்க எதாவது ஊர் வம்பு பேசிக்கொண்டிருப்போம், ஆனால் இந்த மே மாத வெயிலின் புளுக்கம் தாங்காமல் கையில் கிடைத்த அட்டையை விசிறியாக ஆட்டிக்கொண்டிருந்தோம். சர்மா இன்னும் தன் உடலை என்னவோ கன கச்சிதமாக வைத்திருந்தார் ஆனால் அவரது கிராக்கிதான் இப்போது கொஞ்சம் இறங்கித்தான் போனது. ஒவ்வொரு பத்தாண்டும் சினிமாவின் போக்கு மாறிக்கொண்டே இருக்கும் அதில் பழையது முழ்கி புதியது வெளியே வரும் என சாமிக்கண்ணு நேற்று லன்ச் டைம்மில் சர்மா பற்றிப் பேச்சு வந்த போது சொன்னார். எப்படி மறுபடியும் பழைய இடத்தைப் பிடிப்பது என்று எனக்கு நன்றாக தெரியும் என்பதைப் போல வெற்றிலையை மென்று கொண்டிருந்தார்.  ஒரு கால் குட்டையான நாற்க்காலியின் ப

சுடர்விட்டு எரியும் தீப்பிழம்பு

கோவில்கள் பற்றிய மிக முக்கியமான புத்தகமாக குடவாயில் பாலசுப்பிரமணியன் அவர்கள் எழுதிய "தமிழ் கோபுரக்கலை மரபு" என்னும் புத்தகத்தைச் சொல்லலாம்.  இந்த புத்தகம் ஒரு ஆரம்ப வாசகனுக்கு தமிழக கோவில்கள் மற்றும் சிற்ப்பங்கள் பற்றிய அரிய வாசலைத் திறக்கும் என நம்புகிறேன். இவர் ஆய்வுக்காக இலக்கியம், கல்வெட்டுக்கள், புதை பொருட்க்கள் (உதாரணமான நாணங்கள்) மற்றும் கோவில் சிற்ப்பங்களையும் பயன்படுத்தியிருக்கிறார். சொல் ஆய்விலிருந்து கோபுரங்களைப் பற்றிய ஆய்வு துவங்குகிறது. மாட்டுக் கொட்டில் எப்படி கோபுரம் ஆனது என்பதையும் அது எப்படி தமிழகம் வந்தடைந்தது என்பதும் மிக சுவாரசியமான பதிவு. சுடர் விட்டு எரியும் தீப்பிழம்பு எப்படி கோபுரத் தத்துவமானது என்பதும் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம்.  கோபுர கட்டுமானம் பற்றிய தகவல்கள் ஆச்சரியமாக இருக்கிறது. அதோடு இல்லாமல் தமிழகத்தின் முக்கிய கோவில்களின் பழமை பற்றிய ஆராய்ச்சி ஆச்சரியமடைய வைக்கிறது. தஞ்சை பெரிய கோவில், திருவண்ணாமலை என பட்டியல் நீள்கிறது. திருவானைக்கா கோபுரம் அடித்தள கட்டுமானத்துடன் நின்று போனதால், கோவில் கட்டுமானம் எப்படி ஆரம்பிக்கும் என்பதை அறிந

விடாத பூதம்

இந்த பூதத்தைப் பற்றி உங்களுக்கு தெரியாமல் இருக்காது. தெரியாது என்று சொன்னால் நிச்சயம் நீங்கள் இன்னும் குழந்தைதான். விக்கிரமாதித்தியன் கதையில் வரும் வேதாளம் போலதான் இதும். விடுகதை போல கேள்வி கேட்க்கும், பதிலைச் சொன்னால் மற்றொரு கேள்வி. பதில் தீர்ந்து, தாகம் எடுப்பவன் தண்ணீருக்கு அலைவதைப் போன்ற நிலைமையை அடைந்த பின்னால் என்னைப் பார்த்து விழுந்து விழுந்து சிரிக்கும். அப்பப்பா!! அந்த நேரம் எனக்கு வரும் கோவம் இருக்கிறதே!! உங்களுக்கு தெரியாததா அது. நான் யார் என முதலில் பாசமான நாய் போல வந்து நக்கி மேலே விழுந்து நய்ச்சியமாகக் கேட்க்கும். சின்ன வயது என்னை பழைய போட்டோக்களில் பார்க்கிறேன். இப்போது இருக்கும் உடலை கண்ணாடியில் பார்க்கிறேன். சர்வ நிச்சயமாக அதும் இதும் ஒன்றல்ல. சில சமயம் அடையாளம் காண்பது அவ்வளவு எளிதல்ல. அப்படியானால் நான்தான் அது (சின்ன வயது போட்டோவில் இருப்பது) என்று எப்படிச் சொல்ல முடியும்?  இன்னும் வயதானால் நிச்சயம் மாறிப் போவேன். அப்போது இந்த குழந்தை போடோவுடன் ஒப்பிட்டால், யாரும் நம்ப மாண்டார்கள். என்னை சிறுவயது முதல் வயதானது வரை நான் என எண்ண வைப்பது எது? உடலை நான் எனச் சொன்னால் சி