Skip to main content

Posts

Showing posts from September, 2021

கழுமாடன் - அறம் கடவுளுக்கும் மேல் அல்லவா? (ஜெயமோகன் சிறுகதை)

  கழுமாடன் கதையும் பீடம் கதையும் ஒருவகையில் ஒடுக்கப்பட்டவர்கள் தெய்வமாவதுதான். தன்னுடைய கோபம், வடுக்களுடன் ஒருவன் இறந்துபோனால் அது அப்படியே அழிந்து போகாது. மனித உடல் மக்கிவிடும் ஆனால் அவனது எண்ணங்கள் அழியாது மாடனாக வந்து ரத்தம் கேட்க்கும். தன் அதிகார பலத்தால் மிரட்டி பணிய வைக்க முயலுகிறாள் உயர் குடி பெண். அதற்க்கு இணங்கவில்லை என்றால் நாயகனின் அம்மாவை கொன்றுவிடுவதாக மிரட்டுகிறாள். வேறு வழியில்லாமல் அவனும் ஒத்துக்கொள்கிறான். இருவரும் மாட்டிகொள்ளும் போது, அவள் கைப் பிடித்துவிட்டாதாகச் சொல்லி தப்பிக்கப்பார்க்கிறாள். நாயகனுக்கு கழுவேற்றம் தண்டனையாகிறது.  கதையில் இரண்டு அதிர்ச்சியுறும் இடம் வருகிறது. ஒன்று அந்த கழுவேற்றும் ஒத்திகை மற்றது நாயகன் குருவனிடம் தான் அவளைத் தொடவில்லை ஆனாலும் கழுவேறுகிறேன் என்கிறான். இதில் இரண்டாவது சம்பவம்தான் பெரும் அதிர்ச்சி அடையவைக்கிறது. செய்யாத குற்றத்திற்க்காக அவன் கழுவேற்றம் அடைகிறான். காரணம் அவன் புலையன்.  அந்த இழிநிலை தாங்காமல் அவன் மாடனாகி ரத்த பழி வாங்கத் துடிக்கிறான். பீடம் கதையில் வரும் மாடன் அவன். அவன் கேட்ப்பது ரத்தமில்லை, அறம். அறம் கடவுளுக்கும் மேல

சாவி - ஒவ்வொரு குரங்கும், பூமியில் புதிதாகப் பிறந்த குழந்தைகள் (ஜெயமோகனின் சிறுகதை)

  நட்டைத் திருகி இந்த மனித வாழ்க்கைக்குள் மாட்டிக்கொள்கிறது குரங்கு. அப்படி அதை இவ்வாழ்க்கைக்குள் கொண்டுவருவது சரியா தவறா என்பதுதான் இக்கதையின் மைய்யக் கேள்வி. கதையின் நாயகனுக்கு அது சரியெனத் தோன்றுகிறது ஆனால் மற்றவர்களுக்கு அப்படித் தோன்றவில்லை.  கதையில் ஒரு வித தத்துவத்தை பாமரத்தனமாக பேசும் ஒரு கதைமாந்தர் வந்து, நேரடியாக கதையில் மாந்தரிடம் விவாதிக்கிறது. அவனிடம் அதற்க்கு பதிலில்லாத போது திட்ட ஆரம்பிக்கிறான்.  கதை பகடியாகச் சென்றாலும், புராணங்கள் பற்றிய குறிப்புகளுடன் சென்று கொண்டிருக்கிறது. காடுகளை நோக்கி தவம் செய்ய முனிவர்கள் செல்கிறார்கள். பற்றுக்கொண்டதையெல்லாம் தவிர்ப்பதற்க்காக. ஆனால் பற்றுக்கொண்ட குரங்கு காட்டிலிருந்து நாட்டுக்கு வருகிறது. அப்படி வந்த முதல் குரங்கு தான் மனிதன். அறிதலில் இருக்கும் மகிழ்ச்சியை அறிந்துகொண்டது அது. அதற்க்கான சாவியை கொடுத்தபிறகு, தானாக அது பல இடங்களை திறந்துகொண்டு போகிறது.  எல்லாவற்றையும் அறிந்துகொள்ள முயலும் போதுதான் நமக்கு வருகிறது ஞானதுக்கம். அதிலிருந்து வெளிவர மனிதன் பலகாலமு முயன்று வழியைக் கண்டு கொண்டிருக்கிறான். ஆனால் குரங்குக்கு அது சாத்தியமில்

சிந்தே - சிங்கம் சிந்தேவானது (ஜெயமோகன் சிறுகதை)

  கலைகள் என்பது பண்பாட்டுகளின் கண்ணாடி. ஆனால் அது அப்படியே பிரதிபலிப்பதே இல்லை. அதிலிருக்கும் புனைவுதான் காரணம். நிகழ்கால கதை புனைவாக மாறுகிறது. புராணமாகிறது. சர்க்கஸில் பழக்கப்பட்ட சிங்கம்தான் அது. ஆனால் அம்மா சொல்கிறாள் சிந்தே அவரைப் பொறுத்துக்கொள்ளாது. அவளுக்கு ஏனோ அது சர்க்கஸ் சிங்கமாகத் தெரியவில்லை. அப்பவுக்கு அப்படி தெரிகிறது.  வாழ்க்கையின் சில கணங்கள் அப்படி மாறிவிடுமோ என்னவோ. சிந்தே ஆகிறது அந்த சர்க்கஸ் சிங்கம். அறத்தின் பொருட்டு அப்படி நடக்குமா? எழுதியதற்க்கு பணம் கொடுக்காத செட்டியாரை, செட்டி தார் சாலையில் அமர்ந்து மிரட்டினாலே அதுபோல இருக்குமோ.  இன்னும் அதை புரிந்துகொள்ள வளர வேண்டும் போல. ஒரு மாயம் இருக்கிறது. அந்த சிங்கம் சிந்தேவானதில். ஒருவேளை சிந்தே பற்றிப் படித்தால் மர்மம் விளங்கும். நிச்சயமாக இது வித்தியாசமான கதை. நிகழ்வை மட்டுமே சொல்லிச் சென்று இருக்கின்ற கதை. 

பீடம் - அழியாத உணர்ச்சிகள் (ஜெயமோகனின் சிறுகதை)

  எனக்கு நிறைய நாட்க்கள் இந்த சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது. ஒரு மனிதன் இந்த சமூகத்தால் வஞ்சிக்கப்பட்டோ அல்லது ஏமாற்றப்பட்டோ போனால், அதுவும் அவன் ஒடுக்கப்பட்டவனாக இருந்தால் (சாதியால் மட்டுமல்ல, பொருளாதாரத்திலும்),  நிச்சயம் அந்த ஒடுக்கப்பட்டவனால் எதிர்த்து எதுவும் செய்ய முடியாது. அதனால் அவனது மனதில் வரும் வடுக்களும், கோபமும், ஆங்காரமும் அப்படியே காற்றில் கறைந்துவிடுமா? அந்த மனிதனின் இறப்போடு முடிந்து போனால், அவனுக்கான நீதி என்ன? அந்த ஆங்காரம், கோபத்திற்க்கான பதிலென்ன? "அறத்தான் இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை" இந்த கதை ஒடுக்கப்பட்ட புலையர்  சாதியைச் சார்ந்த ஒருவனின் அறம் பற்றிப் பேசுகிறது. அவன் இறந்தபிறகும் வந்து நியாயம் கேட்க்கிறான். இல்லை என்றால் குருதி குடிக்காமல் விடமாண்டேன் என மிரட்டுகிறான். சிவனிடம் போய் வரம்வாங்கி வந்தவன். என்ன செய்ய முடியும்? நெய்விளக்கில் சத்தியம் செய்து இனிமேல் அடிமைவியாபாரம் பண்ணமாண்டேன் என சொன்னபிறகே, அவன் படையலுக்கு ஆறுதல் அடைவதாக ஒத்துக்கொள்கிறான்.  இப்பூவியில் இருக்கும் மனிதர்களின் ஆங்காரம், போபம், வடுக்கள் அவர்கள் மறைந்த பிறக

தீவண்டி -வரத்தை பெற்றவர்கள் (ஜெயமோகன் கதை)

  ஒரு சினிமாபட இயக்குநர் - மாஸ்டர். அவருக்கும் சாமானியமான இக்காவிற்க்குமான ஒரு உறவு இந்த கதையில் மையமாக வருகிறது. ஜான் தன்னை புண்ணியவளானக மாறப்போவதாகவும், தான் இருக்கும் அறையில் ஜீன் இருப்பதாகவும் சொல்லி வைத்திருப்பான். ஜான் இறந்த பல நாட்க்கள் கழித்துக்கூட இழுத்தால் வந்துவிடும் பூட்டைத் திறக்காமல் வைத்திருப்பார். அவர்களுக்கு இடையேடயான உறவு என்பது நகைச்சுவையால் ஆனது. ஜான் நகைச்சுவை விளையாட்டுத்தனமானது. இக்காவின் நகைச்சுவை மாப்பிள்ளைத் தனமானது.  கதை நடக்கும் பின்னனியை தெரிந்துகொண்டு படித்தால் கதை விரிவடையும் என நினைக்கிறேன்.  இக்கா, ஜான் போன்ற மனிதர்களைப் பார்ப்பது ஆபூர்வமானது. தூய உள்ளமும், இயற்க்கையான மனதும் உடையவர்கள். உண்மையில் கடவுளின் பிள்ளைகள் அவர்கள். ஒரு உயிருக்கும் ஒரு தன்மை இருக்கும். அப்படி உயிர்ன் தன்மையுடனே வாழ்வது ஒரு வரம். அந்த வரத்தை அவர்கள் பெற்றிருக்கிறார்கள். அதனால்தான் அவர்களைப் பார்த்தவுடன் நமக்கு மகிழ்ச்சியடையத் தோன்றுகிறது.  ஜானின் கடைசி உலக பந்தத்தையும் தீயிட்டு எறித்துவிடுகிறான் கதை சொல்லி. அது நீலநிற ஹூரி இருந்தாள் என இக்காவிடம் சொல்கிறான். நகைச்சுவையான கதை. கத

எரிமருள்

  இ ந்த பூத்தவேங்கையின் உள்ளிருந்து ஓசையற்ற காலடிகளுடன், கூர்ந்த மூக்குடன், விழித்த கண்களுடன், மெல்லமடிந்த சிறிய காதுகளுடன் உன்னை நோக்கி வருகிறேன். வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் எனச் சில ஒவ்வொருவருக்கும் இருக்கும். சாமனியனிம் அந்த தருணம் மறக்கப்பட்டுவிடுகிறது, ஆனால் கலைஞனுக்கு அது உச்ச தருணாமாகிறது. "முதைச் சுவற் கலித்த முற்றா இளம்புல்".  கவித்துவமான கதை. மெளனி அவர்களின் கதை போன்றது. இந்த கதையின் வாசல் எனக்கு இன்னும் திறக்கவில்லை. மறுவாசிப்புக்கு சில காலம் கழித்து உட்ப்படுத்தினால் திறக்கலாம். இதே போன்ற ஆசிரியரின் மற்ற கதைகள் படித்தால், நிச்சயம் விளங்கும்.  வருங்காலங்களில் மீண்டும் குறிப்பு எழுத வேண்டும்.   

அமுதம்

  இது என்னில் மிக பாதிப்படைய வைத்த கதை. இதைப் பற்றி எழுத அல்லது தொகுத்துக்கொள்ள முடியவில்லை. காரணம் கதை பல தளங்களில் விரிந்து செல்கிறது. முதல் தளம் மற்றும் எனக்கு முக்கியமான தளம் என்பது காமம் சார்ந்தது. அன்னை ஒரு பக்கம் என்றால் மனைவி மறுபக்கம். இருவருக்கும் இடையில் இருக்கும் புள்ளி காமம் இல்லாத பூஞ்யம் என கொள்வோம். மனைவி பக்கம் வரவர காமத்தின் அளவு ஏறிக்கொண்டே போகிறது. மறு எல்லையில் அது கருணையாக/அன்பாக/பாசமாக ஏறிக்கொண்டே போகிறது. நன்றாக யோசித்துப்பார்த்தால் அடிநாதம் காமம்தான். மனைவி அன்னையாகும் தருணம் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆணின் மனம் குழம்பும். இவளை எந்த இடத்தில் வைப்பது? அன்னையின் பக்கமா இல்லை மனைவியின் பக்கமா? எல்லா ஆண்களிடமும் இருக்கும் இந்த பிரச்சனை. ஒருவேளை அன்னைக்கும் மனைவிக்குமான மனப்போரட்டமாகவே ஆணின் வாழ்க்கை முழுவதும் இருக்கும்(காமத்தைச் பொருத்தவரை). இரண்டாவது தளம் நேர்மறையான செயல்களை செய்பவர்கள் மேலான சந்தேகம். சாதாரண மனிதர்களுக்கு இந்த சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும். மனித மனம்  எளிதாக எதிர்மறையான விசயங்களை நோக்கி செல்லும். கருணை, தன்னை சமூகத்துக்காக சமர்பித்தல் போ

மலைவிளிம்பில் - நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் (ஜெயமோகனின் சிறுகதை)

  தன்னையும் தன் தந்தையையும் ஏமாற்றி சொத்துக்களை பறித்துக்கொண்ட சுந்திரத்தை மந்திரம் ஏவிக் கொலை செய்ய காணிக்காரர்களைப் பார்க்க போகும் கதாநாயகனுக்கு சுந்திரம் யாருமில்லாத காட்டில் தனியாக மாட்டிக்கொண்டால். அது விதியா?  வெறி ஏறி கொலை செய்துவிடுவேனோ எனச் சந்தேகப்பட்டு எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். நிச்சயமாக அவனுடைய நிலையில் இருந்திருந்தால் நான் சுந்திரத்தை கொலை செய்திருப்பேன்.  ஒரு சின்ன இடைவெளியில் நான் கதாநாயகனாக மாறிப்போனேன்.  நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் விதியின் வழியை நாம் அறியோம். மிக மிகச் சிக்கலான ஒன்று. அதனுடன் நாம் போட்டியிடுவதென்பது, நம் மண்டையை பாறையில் மோதிக்கொள்வதற்க்குச் சமம். ஒன்றைச் செய் என விதி ஆணையிடுகிறது ஆனால் அதைச் செய்தால் ஆயிரம் பிரச்சனைகள் வருமென எண்ணி மனம் நோகிறது. செய்யும் செயலே விடுதலை. இல்லை என்றால் அந்த உயிர் தகுதியற்றதாகிறது.  " விரும்பிய ஒன்றை பயத்தால் கைவிடுபவன் எதையுமே அடைய தகுதியற்றவனாக தன்னை ஆக்கிக்கொள்கிறான்". சட்டத்தின் தண்டனையெல்லாம் குற்றத்தை ஆதாயத்துக்காக செய்பவர்களுக்கு. இது விதியின் காரணாமாய் செய்பவர்கள். இது இப்படி இவ்வாறு தான் நடக்

நெடுந்தூரம் -மாறதது எல்லாமும் அழிந்துபோகும் (ஜெயமோகனின் கதை)

  பதினைந்து வேலையாட்களை வைத்திருந்த குடும்பம் சோற்றுக்கு கஷ்டப்பட்டு சாகிறார்கள். அவர்களின் கதையிது. முதல் முதலில் கழுகை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியதன் மூலம் பிரபலம் அடையும் அவர்களின் தாத்தா ஏழு பெண்களை மணந்து கொண்டு பெரிய வீட்டைக் கட்டிக்கொள்கிறார். ஆனால் உலகம் மாறுகிறது, அவனது அப்பா இன்னும் கழுகை வாடகைக்கு விட்டு பிழைப்பதிலே இருக்கிறார்.  கழுகு வைத்திருப்பதே குற்றமேன சட்டம் வந்து, அவர் கைதாகியிருக்கிறார். இருந்தும் அவரும் டில்லியும் கழுகை நம்பியே இருக்கிறார்கள். முன் காலத்தில் பிரபலமாக இருந்த இயக்குநர், தற்ப்போது இறந்ததுகூட தெரியாமல், அவரின் உதவியை எதிரி பார்த்துக்கிடந்தனர். எப்படிப் பார்த்தாலும் அவர்கள் இன்னும் இறந்தகாலத்திலே இருக்கிறார்கள். அவர்கள் வெகுதூரம் வர வேண்டி இருக்கிறது. ஆனால் தோக்கி நிற்க்கும் கேள்வி, இப்படி மாறும் உலகத்தில் மாறதவர்களை ஏன் இப்படி தண்டிக்க வேண்டும்? கடந்த காலத்தில் வாழ்வது அப்படி என்ன பெரிய குற்றம்?  கழுகுகள் தன்னை வளர்த்தவன் இறந்துவிட்டான் எனத் தெரிந்ததும் அது அவரை தின்னவில்லை (அவை பசித்திருந்த போதும்). ஆனால் நைனா தான் இறந்த பிறகு இரண்டு நாள் அவைகளிடம்

புழுக்கச்சோறு -சோறு மட்டுமே பிரதானம் (ஜெயமோகன் கதை)

  எனக்கு இரண்டு நினைவுகள் சட்டென எழுந்து வந்தது, இந்த கதையைப் படித்து முடித்தவுடன். ஒன்று நான் அம்மை போட்டிருந்த சமயத்தில் உப்பில்லாமல் பத்தியச் சோற்றை போடுவார்கள். அம்மை வடிந்தபின், நீராட்டி லேசான உப்பைச் சேர்த்து கொள்ளுப் பருப்புச் சோற்றை தருவார்கள். அதுவரை நாக்கை கட்டிப்போட்டு சரியாக சாப்பிடாமல் இருந்த நான். அதை வெறிகொண்டு சாப்பிட்ட ஞாபகம். அம்மா உருட்டி உருண்டாக கையில் தருவதை வாங்கி வாங்கி உண்டேன். பின்னாலில் அந்த சுவைக்காக அம்மை போட்டு தண்ணீர் விடும் வீடுகளில் (அம்மை போட்டவருக்கும் சிறு குழந்தைகளும் அந்த கொள்ளு குழம்புச் சாப்பாடு கொடுக்கப்படும்) அழைந்து திரிந்துருக்கிறேன். இப்போது தெரிகிறது நான் ஏன் கொள்ளு குழம்பை மிகவும் விரும்புகிறேன் என. சென்னையில் அது கிடைப்பதில்லை என்றாலும் நான் வீட்டிற்க்குப் போனால் என் அம்மா இன்னும் கொள்ளுக் குழம்பைத் தான் வைத்துதருவாள். குழந்தைகள் (முதல் ஒரு வருடம்) எல்லாவற்றையும் சுவை மூலமே அறிகிறார்கள். எதைப் பார்த்தாலும் வாயில் போட்டு சுவைக்கவே நினைக்கிறார்கள். அவர்களின் மற்ற புலன்கள் எல்லாம் முக குறைவாக செயல்படும் போல. எனது மருமகனை தூக்கி வைத்திருக்கும

அருகே கடல் - தன் இருண்ட புனைவுக்குள் சென்று கதவைச் சாத்திக்கொண்டான் -ஜெயமோகனின் கதை

  கதாநாயகன் இருண்ட வீட்டிற்க்குள் அடைந்து கிடக்கிறான், உணவில்லாமல் புத்தகம் மட்டுமே துணையாக. வீட்டின் எல்லா ஓட்டைகளையும் அடைத்துவிடுகிறான் சாவி துவாரத்தை தவிர. அதன் வழியே கடல் உள்ளே வருகிறது.  தலைகீழான கடல். அது  புனைவில் உருவான கடல். புத்தகங்களின் துணையுடன் அவன் உருவாக்கிக்கொண்டிருக்கும் புனைவு. அருகேதான் கடல் ஆனால் பார்ப்பதை தவிர்க்கிறான். அவன் புனைவில் உருவாக்கிய உலகம் இருள் நிறைந்த துன்பமான உலகம். அதனைவிட்டு வெளியே வரமுடியவில்லை அல்லது அதிலே திளைக்க அவனது மனம் விரும்பியது. புத்தகங்களை எறித்து தனக்கு உணவு சமைத்தவன்.  ஒருசமயம் வெளியே வரும் போது ஒளியாலான கடலைப் பார்க்கிறான். அவனுக்கு அது அதிர்ச்சியாக இருக்கிறது. தாங்கிக்கொள்ள முடியவில்லை. எலி எப்படி தன் பொந்துக்குள் சென்று அடைந்து கொள்ளுமோ அப்படி அவனும் ஓடிப்போய் தன் இருண்ட புனைவுக்குள் சென்று கதவைச் சாத்திக்கொண்டான். நிறைய படிமங்கள் உள்ள கதை. தலைகீழ் கடல், ஒளிநிறைந்த கடல், சாவி துவாரம்....... இன்னும் நிறைய முறை படிப்பதற்க்கு சாத்தியமுள்ள கதை. 

முதலாமன் _ மனுசன்… மனுசனுக்காக பேசுதேன் - ஜெயமோகன் சிறுகதை

  முதலாமன் சிறுகதை நாட்டார் கதை போல விரிந்து செல்கிறது. எது அறம்? தன்னுடைய மூதாதை கருமலைப்பட்சிக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதா? இல்லை தனி மனிதனை தெய்வத்துக்கு கொடை கொடுத்துவிடுவதா? - அவனுடைய விருப்பத்துக்கு மாறாக.   தலைக்கெட்டுகள் அந்தந்த சாதிக்க நியாயத்தைப் பேசுவான்…அத்தனை சாதிக்க நியாயத்தையும் பேசணுமானா ஒருத்தன் வரணும்”என்று காளியன் சொன்னான் ஊரில் இருப்பவர்கள் முதலில் ஊருக்காக யாரையும் கொடை குடுக்க சரி என்கிறார்கள். தன் குடும்பம் என்று வரும்போது எல்லோரும் இல்லை என மறுக்கிறார்கள்.  காளியன் தனிமனிதனை ஊர் கைவிடக்கூடாது. அது அறம் கிடையாது என்கிறான். அதே வேளையில் தெய்வம் என்பது கட்டுக்கதை. நம்பமுடியவில்லை என்கிறான்.  கடைசியில் யாரும் முன்வராததால் தான் முன்வருகிறேன் என காளியன் செல்கிறான். ஊருக்காக அவன் முதலாவனாக வருகிறான். அப்படி வருகிறவனின் அதிகாரம் ஊரில் நிலைநாட்டப்படுகிறது (நடுகல்லாக கடவுளாக இருக்கிறார்கள்) அப்டி அத்தனைபேருக்காகவும் பேசினவருதான் உமக்க கொள்ளுத்தாத்தனுக்க அப்பன் கிருஷ்ணப்ப பணிக்கரு. அவருக்க அதிகாரத்திலயாக்கும் இப்ப நீரு அந்த மேடையிலே ஊருத்தலைவராட்டு இருந்திட்டிருக்கீரு

வரம் - ஸ்ரீ தேவியை கண்டுகொண்ட திருடனின் கதை (ஜெயமோகனின் சிறுகதை )

  இது முதலில் பார்க்கும் போது திருடர்கள் பற்றிய கதை என்றுதான் தோன்றும். உண்மையில் அப்படி இல்லை. பகவதி அம்மனும் ஸ்ரீ தேவி ஒருவரே. இருவரும் ஒரு காலத்தில் புகழ் பெற்ற இடத்தில் இருந்து நலிந்துவிட்டிருந்தனர். இருட்டு அறையில் கிட்டத்தட்ட யாரும் பார்க்காமல், மறைந்து கிடந்தனர். தான் இருப்பது தனக்கு மட்டுமே தெரியும் என இருந்தனர்.  ஒரு திருடனின் கண்களுக்கு மட்டும் அது தெரிந்துவிடுகிறது. " திருடனுக்கு எல்லாம் தெரியும், ஏனென்றால் அவன் தன்னந்தனிமையானவன், மறைந்திருப்பவன். அவனை எவரும் பார்க்கமுடியாது, அவன் அனைவரையும் மிகக்கூர்மையாக பார்த்துக் கொண்டிருக்கிறான். அவனுக்கு எவருடனும் உறவில்லை, அவனை அனைவரும் எவ்வகையிலோ நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்" ஸ்ரீ தேவி தன்னை கண்டுகொள்ளும் தருணம் முழு அலங்காரத்தில் இருக்கும் அம்மனைப் பார்க்கும் போது. இருளின் (எதிர்மறையின்) நிலையிலிருந்து ஒளியைக் கண்டுகொண்ட தருணம். கற்ப்பகிரகத்தின் ஒளி அது. நிச்சயமாக ஸ்ரீ தேவி மறைந்த பின்னால் அவளது குடும்பம் அவளை தெய்வமாக்கும், காரணம் அவள் வந்த பின்னால் சாதராண டீக்கடை ஓட்டல் ஆகிறது, பொருள் வருகிறது. மகாலட்சுமி இல்லையா அவள்.