இது முதலில் பார்க்கும் போது திருடர்கள் பற்றிய கதை என்றுதான் தோன்றும். உண்மையில் அப்படி இல்லை. பகவதி அம்மனும் ஸ்ரீ தேவி ஒருவரே. இருவரும் ஒரு காலத்தில் புகழ் பெற்ற இடத்தில் இருந்து நலிந்துவிட்டிருந்தனர். இருட்டு அறையில் கிட்டத்தட்ட யாரும் பார்க்காமல், மறைந்து கிடந்தனர். தான் இருப்பது தனக்கு மட்டுமே தெரியும் என இருந்தனர்.
ஒரு திருடனின் கண்களுக்கு மட்டும் அது தெரிந்துவிடுகிறது. "திருடனுக்கு எல்லாம் தெரியும், ஏனென்றால் அவன் தன்னந்தனிமையானவன், மறைந்திருப்பவன். அவனை எவரும் பார்க்கமுடியாது, அவன் அனைவரையும் மிகக்கூர்மையாக பார்த்துக் கொண்டிருக்கிறான். அவனுக்கு எவருடனும் உறவில்லை, அவனை அனைவரும் எவ்வகையிலோ நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்"
ஸ்ரீ தேவி தன்னை கண்டுகொள்ளும் தருணம் முழு அலங்காரத்தில் இருக்கும் அம்மனைப் பார்க்கும் போது. இருளின் (எதிர்மறையின்) நிலையிலிருந்து ஒளியைக் கண்டுகொண்ட தருணம். கற்ப்பகிரகத்தின் ஒளி அது. நிச்சயமாக ஸ்ரீ தேவி மறைந்த பின்னால் அவளது குடும்பம் அவளை தெய்வமாக்கும், காரணம் அவள் வந்த பின்னால் சாதராண டீக்கடை ஓட்டல் ஆகிறது, பொருள் வருகிறது. மகாலட்சுமி இல்லையா அவள். வீட்டை நிறைக்கிறாள், மனதை நிறைக்கிறாள்.
யாருக்கு யார் கொடுத்த வரம்? பகவதி பகவதிக்கே (ஸ்ரீ தேவிக்கு) கொடுத்த வரம். திருடன் ஒரு கருவிதான். நாமெல்லாம் திருடர்கள். சாட்சி மாத்திரமாக மட்டுமே இருப்பவர்கள். ஆற்றல் சக்தி அங்கிருந்துதான் வரவேண்டும். தேவியின் அருளுக்காக வரத்திற்க்காக ஏங்கி நிற்ப்பவர்கள் நாமெல்லாம். ஸ்ரீ தேவியை கண்டுகொண்ட திருடனின் கதை.
https://www.jeyamohan.in/134069/

No comments:
Post a Comment