மலைவிளிம்பில் - நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் (ஜெயமோகனின் சிறுகதை)

 


தன்னையும் தன் தந்தையையும் ஏமாற்றி சொத்துக்களை பறித்துக்கொண்ட சுந்திரத்தை மந்திரம் ஏவிக் கொலை செய்ய காணிக்காரர்களைப் பார்க்க போகும் கதாநாயகனுக்கு சுந்திரம் யாருமில்லாத காட்டில் தனியாக மாட்டிக்கொண்டால். அது விதியா? 

வெறி ஏறி கொலை செய்துவிடுவேனோ எனச் சந்தேகப்பட்டு எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். நிச்சயமாக அவனுடைய நிலையில் இருந்திருந்தால் நான் சுந்திரத்தை கொலை செய்திருப்பேன்.  ஒரு சின்ன இடைவெளியில் நான் கதாநாயகனாக மாறிப்போனேன். 

நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்

விதியின் வழியை நாம் அறியோம். மிக மிகச் சிக்கலான ஒன்று. அதனுடன் நாம் போட்டியிடுவதென்பது, நம் மண்டையை பாறையில் மோதிக்கொள்வதற்க்குச் சமம். ஒன்றைச் செய் என விதி ஆணையிடுகிறது ஆனால் அதைச் செய்தால் ஆயிரம் பிரச்சனைகள் வருமென எண்ணி மனம் நோகிறது. செய்யும் செயலே விடுதலை. இல்லை என்றால் அந்த உயிர் தகுதியற்றதாகிறது. 

"விரும்பிய ஒன்றை பயத்தால் கைவிடுபவன் எதையுமே அடைய தகுதியற்றவனாக தன்னை ஆக்கிக்கொள்கிறான்".

சட்டத்தின் தண்டனையெல்லாம் குற்றத்தை ஆதாயத்துக்காக செய்பவர்களுக்கு. இது விதியின் காரணாமாய் செய்பவர்கள். இது இப்படி இவ்வாறு தான் நடக்கும் என இருக்கும்போது அதை மாற்ற இந்த அற்ப்ப மனிதனுக்கு என்ன தகுதியிருக்கிறது?

உலகமும் அதன் சட்டமும், அறமும் பற்றிய பிரச்சனையல்ல இந்தக் கதை. தன் நெஞ்சறிவதைப் பற்றியது. உளவியல் கதை. 

Comments

Popular posts from this blog

குற்றமும், தண்டனையும்

பீடம் - அழியாத உணர்ச்சிகள் (ஜெயமோகனின் சிறுகதை)

தீவண்டி -வரத்தை பெற்றவர்கள் (ஜெயமோகன் கதை)