Pages

Saturday, November 14, 2015

நான் யார்? -பகுதி - 10

யாரோ போட்ட பிச்சையிலும், பசியை மறக்க முயன்றதாலும் என் உயிர் உடலில் ஒட்டிக்கொண்டிருந்தது. இப்பொதேல்லாம் பசியை விட நான் யார்? என்ற கேள்விக்கு தான் விடைதேடி அழைந்தேன். பல பேர்களிடல் கேட்ட போது என்னை பைத்தியமென்று சிரித்துவிட்டுப் போய்விட்டார்கள். சிறிதுகாலம் பசி என்னை வாட்டி எடுத்தது. யாசகம் கேட்க்க மனம் வரவில்லை. எங்கே முதலில் கிடந்தேனோ அங்கேயே தஞ்சமடைந்துவிட்டேன். அந்த நாயுடன் உடன்படிக்கை ஏற்ப்பட்டது. எப்போது என் முகத்தை கண்ணாடியில் பார்த்தேனோ அப்போதே என் கடந்த கால நினைவுகளை திரும்பப்பெற்றேன். ஆனால் திரும்ப போக மனம் வரவில்லை. அணிந்திருந்த சட்டை மேலும் கந்தலானது. கால்களை அகல விரித்து, சுவரில் சாய்ந்துவிடுவேன். என் முன்னே நீண்ட சாலை, இடப்புறம் அதன் கிளை பிறிந்து சென்றது. சுவருக்கு பின்னால் பெரிய சிவன் கோயில். சாலையில் நடப்பவர்களுக்காக அந்த நடைமேடை கட்டப்பட்டிருந்தது. அதன் ஒரு முனை எங்கோ தொடங்கி, இடப்புறச் சாலையின் தொடக்கத்தில் முடிந்தது. அது முடியுமிடத்தில் பஸ் டாப்பும், அதன் கூரை எங்களுக்கு காவலாகவும் இருந்த்து. சில நேரங்களில் கோயில் சாப்பாடு கிடைக்கும், பல நேரங்களில் நானே கேட்க்காமல் பிச்சையிடுவாற்கள். இப்போதேல்லாம் பாதசாரிகள் என்னைக் கண்டு விலகிப்போவது சாதரணமாகிபோனது. எனக்கு நானே “நான் யார்?” என்று கேட்டுக்கொள்வேன். பதில் கிடைக்காமல் சாலையையும், அதில் போகும் வண்டிகளையும், பாதசாரிகளையும் பார்த்துக்கொண்டே இருப்பேன். யார் முகத்திலும் சந்தோஹ ரேகைகளே பார்க்க முடியவில்லை அந்த ஒருந்தனைத் தவிர. காலையானதும் எங்கள் பக்கத்திலுல்ல பஸ் டாப்பில் நின்றுகொள்வான். காலையில் ஸ்கூல் போகும் சிறுமிகளை வேடிக்கை பார்ப்பான். அவர்கள் போனதும் ஆபிஸ் போகும் பெண்கள் அப்புறம் குடும்ப ஸ்திரிகள். சில நேரம் அவர்களை உரச முற்ப்படுவான். தூர நின்று அவர்கள் மார்பகங்களை வெறிக்கப் பார்ப்பான். காம நோய் முற்றிப்போய் இருந்தது. காமம் தவறானதா? நான் முறைதவறியா செய்துவிட்டேனோ? மாலையிலும் வந்துவிடுவான். பெண்களைப் பார்க்க எந்தேந்த வழியிருக்குக்மோ, எல்லாவற்றையும் முயற்ச்சிப்பான்.
அந்தநாள் வரை எந்த சிக்கலும் இல்லாமல் வாழ்க்கை ஓடியது. திடுமென வானம் பயம்காட்டத் தொடங்கியது. வெண் நிறப்பற்க்களை காட்டி மின்னலேனச் சிரித்தது, பயப்படவில்லை என்றால் இடியென கத்தியது. பாதசாரிகள் பயந்து ஓடினர். நாங்கள் எதற்க்கும் பயப்பட போவதில்லை என்பதைப் போல் உட்காந்திருந்தோம். கோபமடைந்த வானம் தன் அம்புகளை ஏவியது. அன்னாந்து பார்த்தேன் நெற்றியை பதம் பார்த்தது. அடுத்த ஏவுகனைத் தாக்குதல் என் மூக்கின் மேல். மழைத்துளி சிதறியது சிறு சிறு துளியாய். கைகளை நீட்டி அம்புகளை தடுத்தேன். வெகு நேரம் தாக்கு பிடிக்க முடியவில்லை. பிறகு தோல்வியை ஒப்புக்கொண்ட்தாய் என் இரு கைகளையும் உயர்த்திவிட்டேன். மழை அம்பு என் உடலின் எந்த பகுதியையும் மீதமின்றி குத்தியது. தொப்பமாய் நனைந்துவிட்டோம். மின்னல் தொடர்ந்து மிரட்டிக்கொண்டிருந்தது.
நாய் திடீரென பஸ்டாப்பை பார்த்து குரைக்க ஆரம்பித்தது. எதிரே இருக்கும் காட்சி முற்றிலும் மழையால் நனைக்கப்பட்டிருந்தது. மிரட்டிக்கொண்டிருந்த மின்னல் அதை காட்டிக்கொடுத்தது. முதுகெலும்பில் சில்லிட்டது நான் பார்த்த காட்சி. அவன் தெப்பமாய் நனைந்திருந்த பெண்ணின் உடைகளை உருவி கற்ப்பளிக்க முயன்றுகொண்டிருந்தான். என் கை, கால்கள் உறைந்து போயிருந்தன. அவள் கத்துவதை மழை மறைத்தது எவ்வளவு பெரிய குற்றம்?

வேகமாக எழுந்து ஓடினேன். நாயும் என்னோடு வந்தது. பெறும்பாலும் உடைகளை அவன் களைந்திருந்தான். வெற்று உடம்போடு நாணிக் குறுகி நின்றாள். அவன் கைகளைப் பிடித்து இழுக்கும் போது நாங்கள் உள்ளே நுழைந்துவிட்டோம். அவளை பலவந்தப்படுத்துவதிலேயே அவன் கவனமிருந்ததால், கவனிக்கவில்லை. எனக்கு முன் நாய் அவன் கெண்டைக்காலை பிடித்து இழுத்தது. வலி தாங்காமல் அவன் காலை வேகமாக உதரித்தள்ளினான், நாய் பாய்ந்து போய் நடு சாலையில்விழுந்தது. அதற்க்குள் நான் அவன் கைகளைப் பற்றி இழுத்தேன். அவள் நழுவிக்கொண்டாள். தன் உடைகளை மார்போடு அனைத்துக்கொண்டு வெளியே ஓடினாள். திடுமென அவள் சாலையிலோடியதும், வந்த லாரி நிலை தடுமாறி என்னை நோக்கி ஓடிவந்த நாயின் மேல் இடித்து, அதை சாலையில் போட்ட தாராக மாற்றியது. நான் அவனோடு கைகலப்பில் ஈடுபட்டிருந்தேன். நாய் போட்ட சத்தத்தை திரும்பி பார்க்கும் கண நேரத்தில் அவன் என் பிடியிலிருந்து தப்பியோடினான். இப்போது யாரும் அங்கு இல்லை. என் உற்ற தோழனைக் காணவில்லை. ஓடிச்சென்று சாலையில் பார்த்தேன், அதன் தோல் மட்டும் ஒட்டியிருந்தது. உருவமும் இல்லை அந்த உயிரும் இல்லை. எங்கே போய்த் தேடுவேன்? யாரைப் போய் கேட்ப்பேன்? இந்த மக்களைக் கேட்டால் சிரிப்பார்கள்? என்ன செய்ய வேண்டுமென தெரியவில்லை. மழை நின்றபாடில்லை. வானத்தைப் பார்த்து கத்தினேன். பதிலுக்கு வானம் இடித்தது, மின்னியது. கால்கள் நடுங்க என் இடத்தில் வந்து சாய்ந்துகொண்டேன். வானம் என் நண்பனுக்கு இறுதி ஊர்வலம் நடத்தியது. தனிமையை உணர்ந்தேன். மின்னும் போதேல்லாம் அதன் பற்களைக் காட்டி மிரட்டியது தான் ஞாபகத்திக்கு வந்தது. நாங்கள் இருவரும் உணவை பகிர்ந்துண்ணுவோம். சாப்பாடு குறைவாய் கிடைக்கும் நேரங்களில் அதற்க்கே கொடுத்துவிடுவேன். இன்று அது என்னோடு இல்லை என்பதை நான் நம்பமுடியாமல் சித்தபிரமை பிடித்தவனாய் அமர்ந்திருந்தேன்.

No comments:

Post a Comment