Tuesday, September 28, 2021

கழுமாடன் - அறம் கடவுளுக்கும் மேல் அல்லவா? (ஜெயமோகன் சிறுகதை)

 


கழுமாடன் கதையும் பீடம் கதையும் ஒருவகையில் ஒடுக்கப்பட்டவர்கள் தெய்வமாவதுதான். தன்னுடைய கோபம், வடுக்களுடன் ஒருவன் இறந்துபோனால் அது அப்படியே அழிந்து போகாது. மனித உடல் மக்கிவிடும் ஆனால் அவனது எண்ணங்கள் அழியாது மாடனாக வந்து ரத்தம் கேட்க்கும்.

தன் அதிகார பலத்தால் மிரட்டி பணிய வைக்க முயலுகிறாள் உயர் குடி பெண். அதற்க்கு இணங்கவில்லை என்றால் நாயகனின் அம்மாவை கொன்றுவிடுவதாக மிரட்டுகிறாள். வேறு வழியில்லாமல் அவனும் ஒத்துக்கொள்கிறான். இருவரும் மாட்டிகொள்ளும் போது, அவள் கைப் பிடித்துவிட்டாதாகச் சொல்லி தப்பிக்கப்பார்க்கிறாள். நாயகனுக்கு கழுவேற்றம் தண்டனையாகிறது. 

கதையில் இரண்டு அதிர்ச்சியுறும் இடம் வருகிறது. ஒன்று அந்த கழுவேற்றும் ஒத்திகை மற்றது நாயகன் குருவனிடம் தான் அவளைத் தொடவில்லை ஆனாலும் கழுவேறுகிறேன் என்கிறான். இதில் இரண்டாவது சம்பவம்தான் பெரும் அதிர்ச்சி அடையவைக்கிறது. செய்யாத குற்றத்திற்க்காக அவன் கழுவேற்றம் அடைகிறான். காரணம் அவன் புலையன். 

அந்த இழிநிலை தாங்காமல் அவன் மாடனாகி ரத்த பழி வாங்கத் துடிக்கிறான். பீடம் கதையில் வரும் மாடன் அவன். அவன் கேட்ப்பது ரத்தமில்லை, அறம். அறம் கடவுளுக்கும் மேல் அல்லாவா? 

No comments:

Post a Comment

பிச்சைப் பாத்திரம்

  குறிப்பு : மகேந்திரவர்ம பல்லவன் எழுதிய மத்தவிலாச பிரகசனம் என்னும் அங்கத நாடகத்தை தழுவி எழுதப்பட்ட சிறுகதையிது. எழுத்தாளன் என்ற முறையில் கத...