முதலாமன் _ மனுசன்… மனுசனுக்காக பேசுதேன் - ஜெயமோகன் சிறுகதை

 


முதலாமன் சிறுகதை நாட்டார் கதை போல விரிந்து செல்கிறது. எது அறம்? தன்னுடைய மூதாதை கருமலைப்பட்சிக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதா? இல்லை தனி மனிதனை தெய்வத்துக்கு கொடை கொடுத்துவிடுவதா? - அவனுடைய விருப்பத்துக்கு மாறாக.

 தலைக்கெட்டுகள் அந்தந்த சாதிக்க நியாயத்தைப் பேசுவான்…அத்தனை சாதிக்க நியாயத்தையும் பேசணுமானா ஒருத்தன் வரணும்”என்று காளியன் சொன்னான்

ஊரில் இருப்பவர்கள் முதலில் ஊருக்காக யாரையும் கொடை குடுக்க சரி என்கிறார்கள். தன் குடும்பம் என்று வரும்போது எல்லோரும் இல்லை என மறுக்கிறார்கள். 

காளியன் தனிமனிதனை ஊர் கைவிடக்கூடாது. அது அறம் கிடையாது என்கிறான். அதே வேளையில் தெய்வம் என்பது கட்டுக்கதை. நம்பமுடியவில்லை என்கிறான். 

கடைசியில் யாரும் முன்வராததால் தான் முன்வருகிறேன் என காளியன் செல்கிறான். ஊருக்காக அவன் முதலாவனாக வருகிறான். அப்படி வருகிறவனின் அதிகாரம் ஊரில் நிலைநாட்டப்படுகிறது (நடுகல்லாக கடவுளாக இருக்கிறார்கள்)

அப்டி அத்தனைபேருக்காகவும் பேசினவருதான் உமக்க கொள்ளுத்தாத்தனுக்க அப்பன் கிருஷ்ணப்ப பணிக்கரு. அவருக்க அதிகாரத்திலயாக்கும் இப்ப நீரு அந்த மேடையிலே ஊருத்தலைவராட்டு இருந்திட்டிருக்கீரு


Comments

Popular posts from this blog

குற்றமும், தண்டனையும்

கொடுக்கப்படவில்லை பறித்துக்கொள்ளப்பட்டது

பீடம் - அழியாத உணர்ச்சிகள் (ஜெயமோகனின் சிறுகதை)