சிந்தே - சிங்கம் சிந்தேவானது (ஜெயமோகன் சிறுகதை)

 


கலைகள் என்பது பண்பாட்டுகளின் கண்ணாடி. ஆனால் அது அப்படியே பிரதிபலிப்பதே இல்லை. அதிலிருக்கும் புனைவுதான் காரணம். நிகழ்கால கதை புனைவாக மாறுகிறது. புராணமாகிறது. சர்க்கஸில் பழக்கப்பட்ட சிங்கம்தான் அது. ஆனால் அம்மா சொல்கிறாள் சிந்தே அவரைப் பொறுத்துக்கொள்ளாது. அவளுக்கு ஏனோ அது சர்க்கஸ் சிங்கமாகத் தெரியவில்லை. அப்பவுக்கு அப்படி தெரிகிறது. 

வாழ்க்கையின் சில கணங்கள் அப்படி மாறிவிடுமோ என்னவோ. சிந்தே ஆகிறது அந்த சர்க்கஸ் சிங்கம். அறத்தின் பொருட்டு அப்படி நடக்குமா? எழுதியதற்க்கு பணம் கொடுக்காத செட்டியாரை, செட்டி தார் சாலையில் அமர்ந்து மிரட்டினாலே அதுபோல இருக்குமோ. 

இன்னும் அதை புரிந்துகொள்ள வளர வேண்டும் போல. ஒரு மாயம் இருக்கிறது. அந்த சிங்கம் சிந்தேவானதில். ஒருவேளை சிந்தே பற்றிப் படித்தால் மர்மம் விளங்கும். நிச்சயமாக இது வித்தியாசமான கதை. நிகழ்வை மட்டுமே சொல்லிச் சென்று இருக்கின்ற கதை. 

Comments

Popular posts from this blog

குற்றமும், தண்டனையும்

கொடுக்கப்படவில்லை பறித்துக்கொள்ளப்பட்டது

பீடம் - அழியாத உணர்ச்சிகள் (ஜெயமோகனின் சிறுகதை)