ஒரு சினிமாபட இயக்குநர் - மாஸ்டர். அவருக்கும் சாமானியமான இக்காவிற்க்குமான ஒரு உறவு இந்த கதையில் மையமாக வருகிறது. ஜான் தன்னை புண்ணியவளானக மாறப்போவதாகவும், தான் இருக்கும் அறையில் ஜீன் இருப்பதாகவும் சொல்லி வைத்திருப்பான். ஜான் இறந்த பல நாட்க்கள் கழித்துக்கூட இழுத்தால் வந்துவிடும் பூட்டைத் திறக்காமல் வைத்திருப்பார். அவர்களுக்கு இடையேடயான உறவு என்பது நகைச்சுவையால் ஆனது. ஜான் நகைச்சுவை விளையாட்டுத்தனமானது. இக்காவின் நகைச்சுவை மாப்பிள்ளைத் தனமானது.
கதை நடக்கும் பின்னனியை தெரிந்துகொண்டு படித்தால் கதை விரிவடையும் என நினைக்கிறேன்.
இக்கா, ஜான் போன்ற மனிதர்களைப் பார்ப்பது ஆபூர்வமானது. தூய உள்ளமும், இயற்க்கையான மனதும் உடையவர்கள். உண்மையில் கடவுளின் பிள்ளைகள் அவர்கள். ஒரு உயிருக்கும் ஒரு தன்மை இருக்கும். அப்படி உயிர்ன் தன்மையுடனே வாழ்வது ஒரு வரம். அந்த வரத்தை அவர்கள் பெற்றிருக்கிறார்கள். அதனால்தான் அவர்களைப் பார்த்தவுடன் நமக்கு மகிழ்ச்சியடையத் தோன்றுகிறது.
ஜானின் கடைசி உலக பந்தத்தையும் தீயிட்டு எறித்துவிடுகிறான் கதை சொல்லி. அது நீலநிற ஹூரி இருந்தாள் என இக்காவிடம் சொல்கிறான். நகைச்சுவையான கதை. கதை பல தளங்கள் விளங்கவில்லை. மறுவாசிப்பு தேவை.

No comments:
Post a Comment