நிலத்தினும் பெரிதே;
வானினும் உயர்ந்தன்று;
நீரினும் ஆர் அளவின்றே-
சாரல்
கருங் கோல் குறிஞ்சிப்பூக்
கொண்டு,
பெருந்தேன் இழைக்கும்
நாடனொடு நட்பே
குறிஞ்சிப்
பூ மலையின் உயரத்தில் மட்டும் பூப்பது. ஒன்பது முதல் பன்னிரண்டு ஆண்டுக்கொரு முறை மட்டும்
பூக்கும். பூத்தால் நிலம் தெரியாதளவு மலர்கள் விரிந்து கிடக்கும். தேனீகள் அதனைக் கொண்டு
பெரிய கூடு கட்டும். மற்ற தேன்கூட்டில் எல்லா மலர்களின் தேனும் கலந்து இருக்கும் ஆனால்
குறிஞ்சிப் பூ மலர்ந்தால், அதன் தேன் மட்டுமே கூடுகளில் இருக்கும். காரணம், தேன் மலிந்து
கிடக்கும் அக்காலத்தில்.பெருந்தேன் இழைக்கும்.
No comments:
Post a Comment