Skip to main content

பிழை திருத்தம்

பேருந்து திணறியது, கியர் மாற்ற கூட இடம் இல்லை. ஆனால் சூரியன் கண்ணாடியை உடைத்துக் கொண்டு தன் சுடுகதிரை கூட்டதிற்க்கு நடுவே செலுத்தினான். கதிர் மட்டுமே நுழைய முடிந்த இடை வெளியில் கண்டக்டர் நுழைந்து வருவது ஏதோ மந்திரம் காட்டுவது போல இருந்தது. அவர் தொடர்ந்து மந்திரங்களை காட்டிக்கொண்டிருந்தார், எல்லோர் கையிலும் டிக்கெட். சாதி, மதங்களை மறந்து கூட்டம் சுயநலத்தால் பிணைந்திருந்தது.
 முகத்தில் அப்படியொரு களைப்பு. பிள்ளைகளை சோறுட்டி, சீராட்டி பின் பள்ளிக்கு அனுப்பி விட்டு, தன் கணவனுக்கு வேண்டிய பணிவிடைகளை முடித்துவிட்டு, தனியாக அவதிப்படும் நோயளி அம்மாவுக்கு ஓடிப்போய் தன் தாய் வீட்டுக் கடமையை ஆற்றிவிட்டு, தன் இடுப்பை மறைக்கும் சேலையை இழுத்துவிட மறந்துவிட்டு, ஆபிஸ் கவலையில் முழ்கிப்போனால் அந்தப் பெண். ஆனால் அவனுக்கோ அது காமமுரும் இடமாய் மாறியது. ஒருவேளை அவன் அவளுடைய முகத்தைப் பார்த்திருந்தால் அந்த விதமாய் செய்திட தோன்றியிருக்காது.
 முதலில் ஏதோ தெரியாமல் தான்படுகிறது என்று கவனக்குறைவாக விட்டுவிட்டாள். நேரமாக ஆக அந்த கை தவறுகளை தொடர்ந்தது. சட்டென புரியாமல், கொஞ்ச கொஞ்சமாய் தான் புரிய துவங்கியது அவளுக்கு. அந்த கால இடைவெளி அவனுக்கு சாதகமாய் தோன்றிற்று. மூளைக்கு இதைப் புரிந்தவுடன் சட்டென கைகளை தட்டிவிட்டாள். அனுமதிக்கிறாள் என்றேனியவன் உணர்ந்து கொண்டான் ஆமொதிக்கிறாள் என்று. சில நொடிகள் களிந்த பின் மீண்டும் அதே தவறைத் தொடர்ந்தான். அவளுக்கு கவலைகளின் எண்ணிக்கையில் ஒன்று கூடுவிட்டது மேலும் இது பெறும் துயராய் அமைந்தது.
மீண்டும் அவள் தட்டிவிட, அவன் அதை பெரிதாய் எடுத்துக்கொள்ளவில்லை. எப்படியும் இவள் ஊமை தான், நமக்கு ஒன்றும் பெரிதாக ஆகாது என்று எண்ணிக் கொண்டு தன் தவறை அறங்கேற்றினான்.  கைகளால் சண்டையிட்டு வெற்றி கொள்ள முடியவில்லை. தோல்வியின் அடையாளமாய் அவள் கண்கள் பனித்தன. கண்டக்டர் சீட்டு கேட்டுக் கொண்டிருந்தார். சூரியன் இன்னும் ஏணோ பொதுவாய் எல்லோரயும் சுட்டுக் கொண்டிருந்தது, பக்கத்தில் நின்றவர் தன் மகன் வெளி நாட்டில் வேலை பார்ப்பதை பெறுமையாக பேசிக் கொண்டிருந்தார். யாரும் இவள் கஷ்டத்தை கவனித்ததாய் தெரியவில்லை.
 அம்மா இதோ பாரு ரொம்ப நோரமாய் அந்த அத்தை ஆழறாங்க, பக்கதுல இருக்கற மாமா, அத்தையை இடுச்சுக்கிட்டே இருக்காங்க என்றான் பதின்மூன்று வயது மதிக்கத்தக்க சிறுவன்.
அதுவரை கவனிக்காத கூட்டம், கோபமாய் அவன் பக்கம் திரும்பியது. அதுவரை பெண்களுக்கே தெரியாமல் உரசிக் கொண்டிருந்த மனிதகழிவுகள், அவனை நோக்கி கூட்டத்தொடு சேர்ந்து கோப பார்வையை உமிழ்ந்தது. அவள் வேர்வையோடு சேர்ந்து, கண்ணீரும் சிந்தியனாள். படபடப்பானாள், கண்ணீர் வரத்து அதிகரித்தது. கூட்டதின் கோபமும் அதிகமானது.
பொம்பளை இப்படி அவுத்து போட்டா, ஆம்பளை என்ன பண்ணுவான் என மனதுக்குள் சிலர் அவனுக்கு வக்காளத்து வாங்கினார். ஆனால் அந்த சிலரின் துணைவியார் இந்த பேருந்தில் பயணம் செய்யவில்லை. அவனை அடிக்கலாமா வேண்டாமா? என கூட்டம் யோசித்துக் கொண்டிருந்த வேளை சட்டென கன்னத்தில் அறை விழும் சத்தம் கேட்டு அனைவரும் தலையை திருப்பினர்.
அம்மா சிறுவனின் கன்னத்தில் இன்னும் சில அறைகளை தந்து விட்டு, அவனைப் பார்த்துக் கேட்டாள், “ இவ்வளவு நேரம் அத்தை அழுகறத பார்த்துட்டு ஏன் சும்மா நின்ன?, வாய திறந்து சொன்னா என்ன முத்தா உதிர்ந்திடும்?”.
ஏம்மா சின்னப் பையனப் பொட்டு அடிச்சா அவன் என்ன பன்னுவான் என்றார் அங்கே நின்ற ஆசாமி ஒருவர்.
கடுங்கோபத்தில் அம்மா அவரை முறைக்க கூட்டம் வாய் அடைத்து போனது. கையில் வைத்திருந்த இரண்டு வயது மகனைப் பார்த்தேன். அந்த அம்மாவையும், அவனையும் பார்த்தேன். என் மகனை மிக கன்னியமானவனாக வளர்க்க வேண்டுமென அப்போதுதான் தோன்றிற்று.

 பேருந்து அமைதியாக காவல் நிலையம் நோக்கிச் சென்றது. யாரும் அவனை அடிக்கவில்லை மாறாக ஆண்கள் காமத்தை விட்டு எப்போதும் போல பக்கத்தில் நின்றனர்.   

Comments

  1. Nice story.. A lesson to all to have some value system in their mind.. Which can be done.. Whish should not be...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

யாதும் காமமாகி நின்றாய்

எங்கோ சூரியன் தொலைந்து போய்க்கொண்டிருந்தான். நானும் தான். குவித்து வைத்த உள்ளங்கை போல ஏரியின் கரை கவிழ்ந்து கிடந்தது. அதன் கரையேல்லாம் காப்பிச் செடிகள் வளர்ந்திருந்தன. ஏரியின் நீர், கண்ணின் வெள்ளைப் பாவை போல தோன்றிற்று. முடிவிலா வானம் அந்த கண் வழியே தெரிந்தது. பச்சை நிற கண் இமைகளோ அந்த காப்பிச் செடிகள் என்று தோன்றிற்று. அது மலையின் கண், அதனாலோ என்னவோ இவ்வளவு பெரியதாய் நீண்டு கொண்டு போகிறது. தொலைதூரத்தில் ஆரம்பித்த வழி அந்த ஏரியை சுற்றி நாங்கள் தங்கியிருக்கும் பஞ்சாயத்து போர்ட் ஆபிஸ் கெஸ்ட் கவுஸ்ஸில் முட்டி நின்றது. பச்சை நிற மரங்கள் நிறைந்து கிடக்கும் மேகமலையில் அந்த ஒத்தை அடி பாதை மட்டும் வெள்ளை நிறத்தில் ஒரு கோடு போட்டது போல, நாங்கள் உட்காந்திருக்கும் மொட்டை மாடியில் இருந்து பார்க்கும் போது தெரிந்தது. நிச்சயமாய் அது நெற்றியில் இட்ட திருநீருதான். ஆனால் அது ஒரு எல்லைக் கோடு மாதிரியும் தோன்றிற்று. அதன் பின்னால் மலை உயர்ந்து கொண்டே போயிற்று.  அதுநாள் வரை காற்று அப்படி இனிக்கும்மென்று தெரியவில்லை. எத்தனை மலர்களை காற்று தழுவியிருக்கும், இலைகளில் இளைப்பாறியிருக்கும்?  சில சமயம் அவளது நான்

அமுதம்

  இது என்னில் மிக பாதிப்படைய வைத்த கதை. இதைப் பற்றி எழுத அல்லது தொகுத்துக்கொள்ள முடியவில்லை. காரணம் கதை பல தளங்களில் விரிந்து செல்கிறது. முதல் தளம் மற்றும் எனக்கு முக்கியமான தளம் என்பது காமம் சார்ந்தது. அன்னை ஒரு பக்கம் என்றால் மனைவி மறுபக்கம். இருவருக்கும் இடையில் இருக்கும் புள்ளி காமம் இல்லாத பூஞ்யம் என கொள்வோம். மனைவி பக்கம் வரவர காமத்தின் அளவு ஏறிக்கொண்டே போகிறது. மறு எல்லையில் அது கருணையாக/அன்பாக/பாசமாக ஏறிக்கொண்டே போகிறது. நன்றாக யோசித்துப்பார்த்தால் அடிநாதம் காமம்தான். மனைவி அன்னையாகும் தருணம் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆணின் மனம் குழம்பும். இவளை எந்த இடத்தில் வைப்பது? அன்னையின் பக்கமா இல்லை மனைவியின் பக்கமா? எல்லா ஆண்களிடமும் இருக்கும் இந்த பிரச்சனை. ஒருவேளை அன்னைக்கும் மனைவிக்குமான மனப்போரட்டமாகவே ஆணின் வாழ்க்கை முழுவதும் இருக்கும்(காமத்தைச் பொருத்தவரை). இரண்டாவது தளம் நேர்மறையான செயல்களை செய்பவர்கள் மேலான சந்தேகம். சாதாரண மனிதர்களுக்கு இந்த சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும். மனித மனம்  எளிதாக எதிர்மறையான விசயங்களை நோக்கி செல்லும். கருணை, தன்னை சமூகத்துக்காக சமர்பித்தல் போ

மியாவ் மியாவ்

கருப்பணசாமி, சிலை செஞ்சு வச்சுப்போடறன். இந்த சீவன காப்பாத்து என கண்களை மூடி மேற்க்கே பார்த்து வேண்டிக் கொண்டாள் எங்கள் ஆத்தா. பக்கத்தில் பூனை பக்…பக்….கென்று கக்கிக் கொண்டிருந்தது. அதன் கழுத்தை யாரோ அழுத்திக் கொண்டது போல அது கக்கியது. அப்போதுதான் நான் பள்ளிக்கூடத்திலிருந்து வந்திருந்தேன். பூனை கத்தற சத்தமும், ஆத்தா சாமி கும்பிடற சத்தத்தையும் கேட்டு பொடக்காளிக்கு வந்தேன். கண்களை திறந்த ஆத்தா கையிலிருந்த திருநீரை வீசி பூனையின் மேல் எறிந்தாள், பிறகு அதன் நெற்றியில் பூசிவிடப் போனதும் அது பயந்து ஓடிப்போனது. சும்மா இல்லாத, இந்த கெரகம்…….என்று அதை திட்டிக்கொண்டு என்னை பார்த்தவாறு ஆசாரத்திற்க்கு நகர்ந்தாள். எனக்கும் ஆத்தாவிற்க்கும் முந்தானேத்து பயங்கர சண்டை அதனால் பேச மாண்டாள். நான் சிறிது நேரம் அங்கேயே நின்றிருந்துவிட்டு ஏதோ பூனைக்கு உடம்பு சரியில்லைனு நினைத்துக்கொண்டேன். இரா தூங்கும்போது மூங்கில் விட்டத்துக்கும், முகட்டு ஓடுக்கும் நடுவுல இருக்கிற இடைவெளியில மெதுவாக தன்னோட கால எடுத்து வச்சு நகரும். ஆத்தா அங்க பாரு பூனை கத்துது. டேய்… சும்மா கிடக்கமாண்ட. அது கத்துனா கத்துது உனக்கென்ன? எ