நான் யார்? -பகுதி - 8

மனமுடைந்து, வேறு வழியில்லை என்று யோசித்துக்கொண்டு கட்டிலில் முடங்கியிருந்தேன். இதயம் வெடித்தாலும் ஆச்சரியப்பட எதுவும் இல்லை என்றே தோன்றியது. அப்பாவுக்கு மட்டும் தெரிந்தால் என்னவாகும்? ச்சே.. அவர் என்னைப் பற்றி ஊர் முழுக்க எப்படியேல்லாம் சொல்லிவைத்திருக்கிறார். இது தெரிந்தால் தாங்கமாண்டார். கேவலமான அந்த ஊர்மக்களின் பார்வையை ஒரு முறை நினைத்துப் பார்த்ததும் என் உடலே ஆடியது.
நிசப்தமாய் இருளில் முழ்கியிருந்தது என் அறை. இருட்டோடுதான் சிலநாட்களாய் என் அந்தரங்க விசயங்களை கூறுகிறேன். கேட்க்குமோ? இல்லையோ? அது எனக்குத் தெரியாது ஆனால் கொட்டிவிடுவேன். இன்று என்ன சொல்லியும், மனம் ஆறவில்லை.
கம்பெனியோட நிதிநிலைமைனால.. நாங்க சில பேர.. கொஞ்ச நாளைக்குதா. வேர வழியில்லை. “யூ ஆல் கொய்ங்க் டூ பி ரிமுவுடு பார் சம் டைம்” என்றார் மேனேஜர்.
எனக்கு அப்போதே சற்று சந்தேகம். என்னடா.. கொஞ்சப் பேரை மட்டும் தனியாக கான்பரன்ஸ் ஹாலுக்கு கூட்டிட்டு போறாங்களேனு.
என் கண்களில் கண்ணீர் முட்டியது. அழுதால் கேவலமென்று அடக்கிக்கொண்டேன். எனக்கு வேற வேலைனு எதுவும் தெரியாது. ஏதோ படிச்ச, இப்படி வேலை செய்யனும்னு சொன்னாங்க, செய்யறன். அதுக்கு மேல ஒன்னும் தெரியாது. அப்ப நான் வாங்கின டிகிரிக்குனு எதுவும் மதிப்பில்லை. படிக்காதவனுக்கு கூட எதாவது வேலை தெரியும் ஆனா எனக்கு?
சாப்பிட்டு இரண்டு நாள் ஆச்சு. பசி வயிற்றைக் கிள்ளினாலும் சாப்பிடத் தோன்றவில்லை. இருளிலே உழன்றுகொண்டிருந்தேன். திடுமென ஒரு கூக்குரல்..அம்மா எனக் கத்தியது. எனக்கு சற்று பரிச்சமான குரலாதலால், என்னை அறியாது ரூமுக்கு வெளியே ஓடினேன்.  
ஆம்புலன்ஸ் நின்றுகொண்டிருந்தது. அதன் சிவப்பு நிறக்கொண்டை ஏதோ அசம்பாவிதம் நடக்கிறது என்று சொல்லிவது மாதிரி இருந்தது. சற்று நேரம் ஜன்னல் பக்கத்தில் என் காய்ந்துபோன விழிகளை வைத்து பார்த்திருந்தேன். சடலமாக சானுவை ஸ்ரேக்சரில் கிடத்தி எடுத்து வந்தனர். என் காதலைச் சொல்லி ஒரு வாரம் கூட ஆகவில்லை. என்ன ஆச்சோ? நாடி நரம்பொல்லாம் உடைந்து வெளியே வந்ததைப்போல உணர்ந்தேன். கால்கள் நடக்க பலமின்றி தவித்தது. கஹ்டப்பட்டு சானுவின் பிளாக் நோக்கி ஓடினேன்.
நான் போவதற்க்குள் அவளை ஆம்லேன்ஸில் ஏற்றி வைத்திருந்தனர். அடைத்துப்போயிருந்த தொண்டையை பலம்கொண்டு திறந்து வார்த்தையை வரவழைத்தேன். “என்ன ஆச்சு?”.
“சூசைட் பண்ணிக்கிட்டாங்க தூக்கு மாட்டி” என்றார் அலட்சியமாக பக்கத்தில் நின்றிருந்தவர்.
ஆம்புலன்ஸின் பின் ஜன்னல் வழியாக கடைசி முறை அவளது அழகான முகத்தை பார்த்தேன். முகம் விகாரமாகி நாக்கு வெளிவந்திருந்தது. காண சகிக்கவில்லை. கண்களை மூடிக்கொண்டேன்.
ஏன் இப்படி செய்தாய் சானு? மனம் வினவியது. நான் ஒரு முட்டாள், போனை வேறு ஆப் பண்ணிவச்சுட்டன். ஒருவேளை பேசவேண்டுமேன ஆசைப்பட்டாலும் பட்டிருப்பாள். என் மீதே எனக்கு கோவம் வந்தது.
ஆம்புலன்ஸ் ஒப்பாரிவைத்திக்கொண்டே ஓடியது. அது கண் மறையும்வரை பின் ஜன்னலையே பார்த்து நின்றேன். போலீஸ் ஜீப் உருண்டு வந்து ஆம்புலன்ஸ் நின்ற இடத்தில் நின்றது.
தாமஸின் போலியான அழுகையை பார்க்க முடிந்தது.

நான் நடக்கத் தொடங்கினேன். எங்கே போவது என்று தெரியாமல் நடந்தேன். பசி மயக்கம், கால்கள் தள்ளாடின. கொஞ்ச நேரம் திக்கு தெரிந்தது. இப்போது எதுவும் புலப்படவில்லை.  

Comments

Popular posts from this blog

குற்றமும், தண்டனையும்

கொடுக்கப்படவில்லை பறித்துக்கொள்ளப்பட்டது

பீடம் - அழியாத உணர்ச்சிகள் (ஜெயமோகனின் சிறுகதை)