நான் யார்? -பகுதி - 11

இருள் ஆக்ரோசமாய் எங்கும் பரவியிருந்தது. என் உடலை காரிருள் தின்றிருந்தது. எல்லா பொருட்களும் தனக்கு முன்னே திரை கட்டிக்கொண்டு என் கண்களிலிருந்து மறைந்தது. என் நினைவுகள் மட்டும் சுடர்விட்டது. பல நாட்கள் அந்த நாய் என்னை அதன் இடத்தில் சேரவிடவில்லை. ஒரு வழியாய் சில தினங்களில் அதன் இடத்தை பங்கு போட்டுக்கொண்டேன். அதற்க்கெதுவும் தீங்கில்லை என்றதும், என்னை ஆதரித்தது. அதன் ஆத்மாவுக்காக இரஞ்சினேன். என் ஆத்மாவை எண்ணி ஏங்கினேன். முகப்பு விளக்கின் வெளிச்சம் தாடியை நக்கி கடந்து சென்றது. அந்த ஒரு நொடி வெளிச்சம் மனதுக்குள் ஏதோ பண்ணியது. இருட்டுக்கு பழகிப்போன கண்களை, நொடி வெளிச்சம் அந்நியமாக்கியது. காற்று மரங்களுடன் சல்லாபித்திருந்தது. சில இலைகள் தலையின் மேல் உதிர்ந்ததும், அன்னாந்து பார்த்தேன். அலைகள் எதுவுமில்லாத நீல நிறக்கடலைப் போல, மேகமில்லாது வானம் இருந்தது. இந்த உடல் நானில்லை, மனம் வேகமாகச் சொல்லியது. பிறகு தீர்மானமாக்கியது. ஆத்மா அந்த வெளிச்சத்தைப் போல, விழும் போது நாம் தெரிகிறோம், அது கடந்ததும் நாம் மறைகிறோம். உயிர் செனிக்கும் வேளையிலே அதன் மரணமும் நிச்சயமாகிறது. வருந்தி என்ன பயன். அப்படியானால் நான் யார்? ஓயாத கேள்வி சுனைநீராய் வந்தது.
ஆதவன் தன் ஜீவ ஆதார கதிரை அடிவானில் எழுப்பினான். கண்கள் நன்கு சிவந்து, விழியைச் சுற்றி கருவளையம் இருந்தது. ஆடாமல் அசையாமல் அப்படியே உட்காந்திருந்தேன். சூரியன் நன்றாக எழுந்து உயரத்திற்க்கு வந்திருந்தான்.
எப்போதும் போல அன்றும் கூட்டம் களைகட்டியிருந்தது பஸ்டாப்பில். ஒரு பஸ் வரும் நாங்கைந்து பேர் ஏறுவார்கள், அடுத்த பஸ் வரும் மறுபடியும் நாங்கைந்து பேர் ஏறுவார்கள், என்றாலும் கூட்டம் குறைவின்றி இருந்தது. அந்த கேள்வி மட்டும் மனதுக்குள் ஏதோ பண்ணியது. பசியை மறைத்தது. அந்த கேள்விக்கான விடை மட்டும்தான் உணவாகும் எனப்பட்டது. அவன் வரவில்லை. காமகொடுரமான பார்வையை இனி ஒருபோதும் காணமுடியாதேன்றே தோன்றிற்று. காற்று தன் பங்கிற்க்கு கொஞ்ச மணலை என்மேல் தூவியது. உயிர்கள் பிரியும் போது துயரம் மிக்கதாய் இருக்கிறதே! இந்த துயரத்திற்க்கு ஒரு முடிவில்லையா? நான் இவற்றிலிருந்து விடுபடவேண்டும். நான் யார் என்று அறியவேண்டும் என்று மனம் கொதித்தபோது, நீங்க தெய்வம் சாமி.. தெய்வம் என்று ஒரு நடுத்தர வயது மதிக்கதக்க பெண் கன்னடாவில் சொல்லிக்கொண்டு என்பக்கத்தில் வந்து நின்றிருந்தாள். என் தலையை மெதுவாக தூக்கிப்பார்த்தேன், நேற்றிறவு நான் காப்பாற்றிய இளைஞியும் அவள் பக்கத்தில் நின்றிருந்தாள். முதலில் அவள் சொல்வதின் அர்த்தம் எனக்கு புரியவில்லை ஆனால் இப்போதுதான் புரிகிறது. என் முகம் எந்தவித உணர்ச்சிக்கும் ஆட்ப்படவில்லை. நேராய் அவர்களைப்பார்த்தேன்.
அவள் சூடம், பத்தியைப் பற்றி வைத்து, கொஞ்சம் சாப்பாடும் வைத்தாள். அதுவரை துற்நாற்றம் வீசிக்கொண்டிருந்த அந்த இடம் அது முதல் வாசனையானது.
உங்களுக்கு எப்படி கைமாறு செய்யறதுனே தெரியல. கண்களில் கண்ணீர் தாரை தாரையாய் கொட்டியது.
நான் பதிலேதும் சொல்லவில்லை.
அவளே தொடர்ந்தாள். சாமிக்கு எப்படி கைமாறு செய்ய முடியும் என்று சொல்லிவிட்டு, நெடுசானாய் என் கால்களில் விழுந்து வணங்கினாள், அந்த இளைஞியும்.
சூடம் காற்றுக்கு ஆடியது. எல்லோரும் எங்களை வைத்த கண் வாங்காமல் பார்த்தனர்.
மணம், காமம், இந்தப் பெண், அங்கு நிற்பவர்கள், என் காட்சி எல்லாம் மாயையாய் தோன்றியது. ஒரு நொடி எனக்குள் போரானந்தம் சுரக்க ஆரம்பித்தது.
அந்த வழியாக நடந்து போன சிறுவன் ஒருவன், தன் அம்மாவிம் கைகளைப் பிடித்திக்கொண்டு கேட்டான். “இவரு யாரு?”.

சட்டென சொன்னேன். “நான் கடவுள்”.     

Comments

Popular posts from this blog

குற்றமும், தண்டனையும்

கொடுக்கப்படவில்லை பறித்துக்கொள்ளப்பட்டது

பீடம் - அழியாத உணர்ச்சிகள் (ஜெயமோகனின் சிறுகதை)