Pages

Wednesday, June 1, 2016

வெண்தோடு

எங்கோ சூரியன் தொலைந்து போய்க்கொண்டிருந்தான். நானும் தான். குவித்து வைத்த உள்ளங்கை போல ஏரியின் கரை கவிழ்ந்து கிடந்தது. அதன் கரையேல்லாம் காப்பிச் செடிகள் வளர்ந்திருந்தன. ஏரியின் நீர், கண்ணின் வெள்ளைப் பாவை போல தோன்றிற்று. முடிவிலா வானம் அந்த கண் வழியே தெரிந்தது. பச்சை நிற கண் இமைகளோ அந்த காப்பிச் செடிகள் என்று தோன்றிற்று. அது மலையின் கண், அதனாலோ என்னவோ இவ்வளவு பெரியதாய் நீண்டு கொண்டு போகிறது. தொலைதூரத்தில் ஆரம்பித்த வழி அந்த ஏரியை சுற்றி நாங்கள் தங்கியிருக்கும் பஞ்சாயத்து போர்ட் ஆபிஸ் கெஸ்ட் கவுஸ்ஸில் முட்டி நின்றது. பச்சை நிற மரங்கள் நிறைந்து கிடக்கும் மேகமலையில் அந்த ஒத்தை அடி பாதை மட்டும் வெள்ளை நிறத்தில் ஒரு கோடு போட்டது போல, நாங்கள் உட்காந்திருக்கும் மொட்டை மாடியில் இருந்து பார்க்கும் போது தெரிந்தது. நிச்சயமாய் அது நெற்றியில் இட்ட திருமண்தான். ஆனால் அது ஒரு எல்லைக் கோடு மாதிரியும் தோன்றிற்று. அதன் பின்னால் மலை உயர்ந்து கொண்டே போயிற்று.  அதுநாள் வரை காற்று அப்படி இனிக்கும்மென்று தெரியவில்லை. எத்தனை மலர்களை காற்று தழுவியிருக்கும், இலைகளில் இளைப்பாறியிருக்கும்?
 சில சமயம் அவளது நான்கு முடியை ஆட்டி என் மேல் மோத வைக்கும், அவள் விலக்கிவிடுவாள். சுற்றிக்கொண்டு போய் துப்பட்டாவை தூக்கி அடிக்கும், இழுத்துவிடுவாள். சட்டென ஓடிவிடும். எதிர்பாரத நேரத்தில் முடிகள் அனைத்தையும் வாரி என் மேல் வீசும். கருந்திரை இருவரது முகத்தையும் மூடிவிட்டது. பையாஸ்கோப்பில் புகைப்படத்தை சின்ன வயதில் பார்ப்பது போலயிருந்தது, சிகையினுடே அவளது முகம். வெட்க்கத்தில் விளைந்த புன்னகை அவளது இதழ்களில் பரவியது. மனதுக்குள்ளே அந்த புன்னகை அமர்ந்துகொண்டு, என் மனதை தொண்டி தொண்டி மகிழ்ச்சியை எடுத்துக்கொண்டு இருந்தது. எங்கிருந்து வந்தது இவ்வளவு ஆனந்தம்? என்னுள்ளே தூங்கிக்கிடந்திருக்குமோ? சிகையை இரு கரங்களால் வளைத்து அவள் தலையின் பின் சேர்தேன். காது மடலுக்குள் அந்த நான்கு முடியை சொறுகிவிடுவதில் அவளுக்கு என்ன சந்தோஹம் என்று தெரியவில்லை? கொஞ்ச நேரம் அவளது தலையை பிடித்துக்கொண்டு மயாஜாலம் காட்டும் கண்களின் இரகசியத்தை கண்டுபிடிக்க முயன்றுகொண்டிருந்தேன். ம்கூம்….நிரபராதி போல அந்த கண்கள் நடித்தது. முதலில் நானும் அப்படித்தான் நினைத்தேன் ஆனால் அது உண்மையில்லை. ஒவ்வொறு முறையும் ஆராய முயலும் போது, எனது இருப்பை மறந்து தொலைந்து போவேன். பிறகுதான் தொலைந்து போனதன் நினைவே வரும். நீதிமன்றத்தில் உண்மை தெரிந்த இருவர் எதிர் எதிர் கூண்டில் நிற்க்கும் போது, உண்மை வாதடப்படும். ஆராயப்படும். நான் நீதிபதி ஆகும் போதெல்லாம் உண்மை மறந்துபோகிறது. சாட்சிக் கூண்டுக்குள் வந்தால் தெரிகிறது. அசையும் கற்ப்பாறை அவள் தலைக்கு மேல் தெரிந்தது.
அங்க பாரு யானைக் கூட்டம், என்றேன்.
அவள் தலையை திருப்பி, மலைக்கு மேலே நின்ற கூட்டத்தை பார்த்தாள். சில யானை மரங்களை உடைத்துப் போட்டது. கைகளை நீட்டி ஆமாம்.ஆமாம் என்றாள்.
இருளேனும் கற்ப்பப்பை பூமியை தினந்தோறும் காலை வேளையில் செனிக்க வைக்கிறது. மலையிலிருந்து சூரியன் தற்க்கொலை செய்வது போல தோன்றிற்று. கற்ப்பப்பை மலையிலிருக்கும் ஒவ்வொரு மரமாய் விழுங்கிகொண்டு போனது. கடைசியாய் நாங்களிருந்த கெஸ்ட் கவுஸ்சும், திருப்பிப் பார்ப்பதற்க்குள் மலை முழுவதும் அதனுள். மிக விரைவாக இருட்டிவிட்டது.
கார்த்திக் என்று அழைத்துக்கொண்டே என் தோள் மேல் சாய்ந்து கொண்டாள்.
காற்று என் மீது இருக்கும் போது எப்படி இருக்குமோ அப்படித்தான் இருந்தது. ம்.. என்றேன். ஒரு வித சங்கிதமாய் அந்த இரவில் கேட்டது.
நா ரொம்ப சந்தோஹமா இருக்கேன் என்றாள்.
அவள் தோள் மேல் கை வைக்கலாமா என்று யோசித்துக்கொண்டிக்கும் போது இந்த கேள்வியைக் கேட்டாள். எனக்கு என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை. நானும் ரொம்ப சந்தோஹமாதா இருக்கேன் என்றேன் பதிலுக்கு.
நிலவு மெதுவாக ஊர்ந்துகொண்டு வந்தது. வானம் மேகத்தை போர்வையை போல அடிக்கடி இழுத்துப் போர்த்திக்கொண்டுவிட்டது. நல்ல குளிர ஆரம்பித்திருந்தது. இரவு பூச்சிகள் பாட தொடங்கியது.    
நாம இந்த உலகத்தை விட்டு எங்கோ வெகு தொலைவில் இருக்கறமாதிரியும், நீயும் நானும் மட்டும் தனியா இருக்கறமாதிரியும் தோணுது. என்னால சந்தோஹத்த தாங்கிக்க முடியல. அவள் கண்களின் ஓரம் லேசாக கண்ணீர் வழிந்தது.
திடுமென போன் பண்ணி, நாம எங்கோயவாது போலாம் என்றாள். சரி மாயாஜால் போலாம் என்றேன்.
இல்லைபா.. எங்கயாவது ஒரு மூனு நாள், நாலு நாள் போலாம். மனசு சரியில்லனா. சுந்தர்தா மேகமலைய பத்தி சொன்னான். வழியேல்லாம் மோசம். ஓருவழியா வந்து சேர்ந்ததுக்கு அப்புறம்தான் தெரிந்தது ஓட்டலே இல்லைனு. எப்படியோ இங்க இடம் கிடச்சுச்சு. ஆபிஸ்க்காக முன்னாடி சின்ன பில்டிங், அதுக்கு பின்னாடி இரண்டு மாடில கெஸ்ட் கவுஸ். நாங்க தங்கின ஒரு ரூம தவிர மீதியெல்லாம் காலியாத கிடந்துச்சு.
ஆற்றில் அடித்த பொருளைப் போல துப்பட்டாவை காற்று அடித்து தூக்கி தரையில் வீசியது. அவள் அதைப் பற்றி கவலை அற்றிருந்தாள்.
கைகளை வளைத்து அவள் கழுத்தை சுற்றிக்கொண்டேன். நான்கு முடியை இந்த முறை நான் விலக்கி, அவள் காதறுகே இரகசியம் சொன்னேன். நீ தேவதை, இந்த மலைகளுக்கும், காற்றுக்கும், மரங்களுக்கும், ஏன் இந்த காட்டுக்கே.
அவ்வளவுதானா? என்றாள்.
எனக்கும். அவள் சிரித்தாள். மது தேடிய வண்டு போல நான் அவள் இதழ்களை முத்தமிட்டேன். ஆமாம் இனம் இனத்தோடுதானே சேறும்.
சார்… தோசை ரெடி. குரிசு வந்து நின்றிருந்தான்.
நான் அவளது இதழ்களிலிருந்து, எனதை பிரித்தேன். அவன் பார்வை துப்பாட்டா இல்லாத மார்பகங்களை முறைத்தது.
அவள் திரும்பி துப்பட்டாவை துலவினாள். நான், சரி வற்றேன் நீங்க போங்க என்றான்.
ஆனால் அவன் சற்று தாமதித்துதான் சென்றான்.

         

No comments:

Post a Comment