கம்பராமயாணம் - இருவினை வெள்ளம்

முல்லையைக் குறிஞ்சி ஆக்கி,
   மருதத்தை முல்லை ஆக்கி,
புல்லிய நெய்தல்தன்னைப் பெரு
   அரு மருதம் ஆக்கி,
எல்லையில் பொருள்கள் எல்லாம்
   இடை தடுமாறும் நீரால்,
செல்லுறு கதியின் செல்லும்வினை
   என, சென்றது அன்றே
.

முல்லை நிலத்தை குறிஞ்சி
நிலமாக்கியும்;  மருத நிலத்தை முல்லை நிலமாகச்   செய்தும்;புன்புலமாகிய
நெய்தல்  நிலத்தை; நிகரில்லாத மருத நிலமாகச்  செய்தும்; (பல்வேறு
நிலங்களின்)  அளவற்ற   பண்டங்களை  யெல்லாம்; தத்தம் இடத்தை விட்டு  வேறு நிலத்துக்குக் கொண்டு செல்லும்
தன்மையால்; செலுத்தப்படுகின்ற
போக்கிலே   இழுத்துப்  போகின்ற; இருவினைகள் போல (அந்த வெள்ளம்) சென்றது.

பொதுவாக கவிதைகளை அல்லது இலக்கியங்களை படிக்கும் போது, அவற்றை சுருக்கக்கூடாது. அவைகள் வெடிகுண்டைப் போல. விழுந்ததும் வெடித்து சிதறி பெருக வேண்டும். தொடர்ந்து கவிதைகளைப் பற்றி சிந்திப்பதால் அது சாத்தியப்படும். 

நாம் செயய்யும் செயலால் தொடர்ந்து நம் நிலைகள் உயர்ந்து தெய்வ நிலையை அடையலாம் அல்லது நேர்மாறாகவும் நடக்கலாம். அது நம் செயலைப் பொறுத்தது. இங்கு நதியை வினையோடு பொறுத்தியது மிக அற்ப்புதம். குறிஞ்சியோ, முல்லையோ எந்த வித நிலத்தின் பொருளும் கடலைச் செறுவதில் எந்த பிரச்சனையும் இல்லை. அது போல மனிதன் எல்லா வழிகளிலூம் ( பக்தி, ஞான இன்னும் வேறு மார்க்கங்களில்) கடவுளை அடையலாம். எல்லா விதமான வேற்றுமைகளும் ஏற்று கொள்ளப்படும். இங்குதான் இந்தியாவின் மையபுள்ளி ஆரம்பிக்கிறது. அதுதான் விடுதலை. இன்னும் கற்ப்பனையை விரித்தால் விளங்கும்.

Comments

Popular posts from this blog

குற்றமும், தண்டனையும்

கொடுக்கப்படவில்லை பறித்துக்கொள்ளப்பட்டது

பீடம் - அழியாத உணர்ச்சிகள் (ஜெயமோகனின் சிறுகதை)