கம்பராமயாணம் -மழைத் தாரையின் தோற்றம்
.
| புள்ளி மால் வரை பொன் எனல் நோக்கி, வான், வெள்ளி வீழ் இடை வீழ்த்தெனத் தாரைகள், உள்ளி உள்ள எல்லாம் உவந்து ஈயும் அவ் வள்ளியோரின், வழங்கின-மேகமே. புள்ளி மால் என்பது இமையமலை. அது பொன் போல இருந்தது. வானோர் அதனை அடையும் பொருட்டு வெள்ளி விழுதுகளை மலைகளுக்கு இடையே செலுத்தினர். பனிமலையான இமையமலை மீது மாலை சூரிய கதிர்கள் பட்டு பொண் போல மின்னும். மேகங்கள் பனியை கொட்டும். அதைக் கண்டு கவிஞன் தன் கற்ப்பனையை விரிக்கிறான். இங்கு கற்ப்பனையை விரித்தல் என்பது மிக முக்கியமான ஒன்று. இதற்க்கு சிறந்த உதாரணம் குழந்தைகள். சின்ன டப்பாவை குக்கராகவும், மண்ணை சோறாகவும் கற்ப்பனை செய்துகொள்கிறது, பின்பு அதே மண்ணை குழப்பாக மாற்றி கொள்கிறது. ஆனால் நாம் அன்றாட வாழ்வில் அதனை தொலைத்து கொண்டிருக்கிறோம். இயந்திரமானோம். சற்று சிந்தித்தால் விளங்கும். |
Comments
Post a Comment