Wednesday, April 13, 2016

கம்பராமாயணம் -விலை மகளிர் : வெள்ளம்


தலையும் ஆகமும் தாளும் தழீஇ, அதன்
நிலை நிலாது, இறை நின்றது போலவே,
மலையின் உள்ள எலாம் கொண்டு மண்டலால்
விலையின் மாதரை ஒத்தது - அவ் வெள்ளமே.
 
விளக்கம் :
விலை    மாதர்     காமுகரது
பொருள்களைக்  கவருமளவும்  அவர்களைத் தழுவிக்     காண்டிருந்து,
கவர்ந்தவாஎறே   விரைவில்  விட்டு  நீங்குதல்  போல,    வெள்ளமும்
மலையில்  உள்ள  பொருள்களை  யெல்லாம் வாரிக்   கொள்ளுமளவும்
மலையைத்  தழுவிக்  கொண்டிருந்தது.  வாரிக் கொண்டவாறே   விட்டு
நீங்கிற்று’ எனச் சிலேடை விளக்கம் தருவர் காஞ்சி இராமசாமி நாயுடு.

கம்பனை புரிந்து கொள்ள சில முயற்சியை முன் வைக்கிறேன். 

இந்த கவிதையை படித்த எல்லோருக்கும் வரும் சந்தேகம், எப்படி மலையில் ஓடும் வெள்ளத்தை விலை மாதரோடு ஒப்பிடலாம்? வெள்ளம் என்பது புனிதமானது, உயிர்களை செனிக்க வைக்கிறது. ஏன் நதிக்கரை ஓரம்தான் நாகரிகம் தோன்றி, வளர்ந்தது. அப்படியிருக்க இது தவறான ஒப்பிடா? 
எப்போதுமே ஒரு ஒப்பீடுக்கு சென்றால் அதன் காலகட்டத்தை கணக்கில் கொள்ள வேண்டும். இல்லை என்றால் தவறான சித்திரம்தான் கிட்டும். நம் கணக்குப்படி வெள்ளம் என்பது வளத்தை குறிக்கிறது. அதே போல் காமம் என்பதும் வளத்தை சுட்டும் ஒரு குறீயீடாக பயன்படுத்தப்பட்டது. உயிர்கள் செனிப்பதற்க்கான காரணமே அதுதான். அந்த காலத்தில் காமத்தை போற்றி  பாடினர், சிலை வடித்தனர். இதன் பொருட்டு கம்பன் விலை மகளிரையும், வெள்ளத்தையும் இணைத்து கவிதை படித்தான். 

சற்று உங்கள் சிந்தனைகளை வளரவிட்டு யோசிங்கள், ஏன் கோவிலில் நிர்வான சிலைகள் இருக்கிறதேன்பது விளங்கும். 


No comments:

Post a Comment

பிச்சைப் பாத்திரம்

  குறிப்பு : மகேந்திரவர்ம பல்லவன் எழுதிய மத்தவிலாச பிரகசனம் என்னும் அங்கத நாடகத்தை தழுவி எழுதப்பட்ட சிறுகதையிது. எழுத்தாளன் என்ற முறையில் கத...