Pages

Monday, March 14, 2016

கற்பனைக்கும் நிஜத்திற்க்குமான ஊசலாட்டம் - ஜெயமோகனுடன் ஒரு சந்திப்பு


ஜெவை சந்தித்தால் இழந்தது ஒரு சோப்பு டப்பா, துண்டு மற்றும் அன்டர்வேர் (அதை அடக்கம் செய்தவர்களுக்கு நன்றி கூற கடைமைபட்டுள்ளேன்). பெற்றது சில திட்டுக்கள், வாழ்க்கையின் உன்னத நிமிடங்கள், நிறைய சந்தோசம், இலக்கியம், அரசியல், கேளிக்கை இன்னும் பல. ஒருவித பயம் காரணமாகவே இந்த இன்னும் பல என்ற வார்த்தையை பள்ளியிலிருந்து பயண்படுத்துகிறேன். நானும் எனது நன்பர்களும் அப்துல் கலாம் அவர்களை சந்திக்கலாம் என முடிவெடுத்து கடந்த வருடம் ஜுலை முப்பதாம் தேதி அவரது ஊருக்கு சென்றோம். அவரை கண்டதும் கண்கள் கலங்கிவிட்டது, ஒருவித வெறுமை உணர்வுக்கு ஆளானோம். உடனே நாங்கள் ஒரு தீர்மானத்திற்க்கு வந்தோம். யார்யாரையேல்லாம் கொண்டாடுகிறோமோ அவர்களை சந்திப்பது என்று. அந்த வரிசையில் முதலில் ஜெ இருந்தார். அதை நண்பர்களும் சத்தியமாக முழுமனதுடன் ஏற்றுக்கொண்டனர். 
நண்பர்களே! என அழைப்பது இல்லை இல்லை வரவேற்ப்பதும், அல்ல என மறுதளிப்பதும்மென ஜெவின் பேச்சுக்கள் மனதிலே ஓடியது. கிரியை நான் ஜெ என்றே ஊகித்ததும், அவருக்கு ஒரு பிம்பத்தை என்னுள்ளே தந்திருந்தது. இரயிலிலிருந்து அவசரமாய் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்க்கு நுழையும் போது ஜெவின் குரல் கேட்டது. நவீன இலக்கியத்தின் அறிமுகம் கிட்டி காட்டுக்குள்ளே சென்றுவிட்டேன். காட்டை சுற்றி பார்க்கும் போதுதான் தெரிந்தது அது வளருமென்று. நாளுக்கு நாள் அது விரிந்து கொண்டே செல்கிறது அகத்திலும், புறத்திலும். சரி ஊர் பக்கம் போய் பாக்கலாம் என்று முடிவெடுத்து விஷ்ணுபுரம் போகலானேன். காட்டிலே இருந்து பழகி, ஊருக்குள் செல்வது இயலாத காரியமென்றே தோன்றிற்று.வழியில் அறமுன்னு சிற்றூர் கண்டு, கொஞ்ச நாள் வசித்து, மீண்டும் பயணப்பட்டேன். ஜெவின் குரல் அந்தரங்கமாக என்னுள்ளே ஒலித்துக்கொண்டேயிருந்தது. வாசலில் தலைப்பட்ட என்னை வரவேற்றார்கள். என்னுள்ளே ஒலித்த கற்ப்பனைக் குரலும், வெளியே ஒலித்த நிஜக்குரலுமாய் ஜெ. மனம் ஊசலாடியது. 
மதமும் உலக வரலாறும் பிண்ணி அவரது வாயிலிருந்து கொட்டியது. திடுமென கோபம் கொண்டு சபை விவாதத்தை பற்றி விளக்கினார். விவாதம் கருப்பொருளிருந்து விலகிவிட்டதென்பது அவரது கோபம்.ஆங்கில நாவலில் ஆரம்பித்து ஆங்கில நாவலிலே வலம் வந்தது விவாதம். நல்லவேளை சாப்பாடும் வந்தது. ஓர் எழுத்தாளனை சந்தித்து அவரது படைப்பை பற்றி மிக குறைவாக பேசியது ஒரு மனக்குறையே. 
சாப்பிட்டு முடித்ததும் கட்டுரை படிக்க கிட்டியது. ஒன்றாம் வகுப்பிலிருந்து படிக்கிறோம், இன்னும் எப்படி படிப்பதென்று தெரியவில்லை. எப்படி படிப்பதென்றும், கவனிப்பதென்றும் ஆழமாய் விவரித்தார். பின்பு தலைவர்களைப் பற்றின சூடான விவாதம, சூடு டீ வரும் வரை தொடர்ந்தது. வாக்கிங் போகலாமென்று நினைத்து அரசியல்வாதி போல நடைபயணம் சென்றோம். பொதுவாக பேசிக்கொண்டதும் அரசியல்தான். நடைபயணம்னா சத்தியாகிரகத்தை பற்றியா பேசுவார்கள் பின்ன? கோயிலை சுற்றிவிட்டு தொடர்ந்தோம். வேடிக்கை பார்க்க மின்மினிப் பூச்சிகள் வந்திருந்தது. கேளிக்கையோடு நாள் முடிவுக்கு வந்தது. அப்படி சிரித்து பல நாட்களாயிருந்தது.
மறுநாள் விளிக்கும் போது சோர்வு என்னை தழுவியிருந்தது, போர்வை விலகி கிடந்தது. பல் விளக்கி பம்புசெட்டில் குளித்தேன், ஜெ எனக்கு முன்னே அதில் குளித்திருந்தது சற்றே ஆச்சரியமூட்டியது. சிலைகளைப் பற்றின விவாதம் ஏழு மணிக்கே தொடங்கியது என்னை சிலையாக்கியது. சிறுகதை பற்றின விவாதம் மிக பயணுள்ளதாக இருந்தது. தொடர்ந்து படைப்புகளின் மீதான விமர்சனம். சிறுகதை மீதான என் கோட்ப்பாட்டை மாற்றினீர்கள். ஓர் சிறந்த சிறுகதையை எழுத வேண்டும் என்ற வைராக்கியம் வந்தது. கூடவே சோகமும் வந்தது. பிரிவு பெறும்பாலூம் அதைதானே தரும். ஜெ ஒன்று நிச்சயம், உங்களைப் போன்றோரை வரலாறு அடிக்கடி தருவதில்லை. நீங்கள் எழுத்தால் ஒரு சாம்ராஜுயத்தை கட்டி எழுப்பியுள்ளீர்கள்.அது காட்டிலிருந்து சென்னைக்கும், விஷ்ணுபுரத்திலிருந்து சென்னைக்கும், இதுமாதிரி பல கற்ப்பனையிலிருந்து, நிஜத்திற்க்குமான ஊசலாட்டம்.

No comments:

Post a Comment