இனிமேலும் சேர்ந்து வாழமுடியுமேன தோன்றவில்லை. வெறுப்பை உமிழும் அவள் கண்கள் ஞாபகத்திற்க்கு வந்தது. ஒருவித ஈர்ப்பையும், அன்பையும் சொறிந்த அதே கண்கள்தான் நான்கு வருட திருமணத்திற்க்கு பிறகு இப்படி மாறிப் போனது. எனக்கு விருப்பம் இருக்கிறதோ இல்லையோ நான் பல காரியங்களை அம்மா, அப்பாவின் ஆசைக்காகவே பண்ணியிருக்கிறேன். அதில் கல்யாணமும் ஒன்று. சொல்லப்போனால் எனக்கு இஷ்டமே இல்லை. ஒன்றை மறுக்கும் போதேல்லாம், அதைச் செய்தாக வேண்டி வற்புறுத்தப்பட்டிருக்கிறேன். பள்ளிக்கூடம் போவது, வேலைக்கு போவது என அதன் பட்டியல் நீளும். யாருக்காக இதைச் செய்கிறேன் என்று சத்தியமாக விளங்கவில்லை? ஆனால் அது அம்மா, அப்பாவின் விருப்பம். ஏன் அது அவர்கள் விருப்பமானது என எனக்கு தெரியாது. காற்றடிக்கும் திசையில் மேகங்கள் போவதைப் போல நானும் மற்றவர்களைப் போல நகர நிர்பந்திக்கப்பட்டேன். புதிதில் இருக்கும் கவர்ச்சியும், சுவாரஸ்யமும் என்னை சில நாட்க்கள் கட்டிப்போட்டது என்னவோ உண்மைதான். தேக்கிவைக்கப்பட்ட அணையின் நீர் மட்டம் எப்படி வரவு இல்லை என்றால் வடிந்து இல்லாமல் ஆகுமோ அதே போலதான் அந்த கவர்ச்சியும், சுவாரஸ்யமும் ஆனது. பாடியி...
எனக்கு நிறைய நாட்க்கள் இந்த சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது. ஒரு மனிதன் இந்த சமூகத்தால் வஞ்சிக்கப்பட்டோ அல்லது ஏமாற்றப்பட்டோ போனால், அதுவும் அவன் ஒடுக்கப்பட்டவனாக இருந்தால் (சாதியால் மட்டுமல்ல, பொருளாதாரத்திலும்), நிச்சயம் அந்த ஒடுக்கப்பட்டவனால் எதிர்த்து எதுவும் செய்ய முடியாது. அதனால் அவனது மனதில் வரும் வடுக்களும், கோபமும், ஆங்காரமும் அப்படியே காற்றில் கறைந்துவிடுமா? அந்த மனிதனின் இறப்போடு முடிந்து போனால், அவனுக்கான நீதி என்ன? அந்த ஆங்காரம், கோபத்திற்க்கான பதிலென்ன? "அறத்தான் இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை" இந்த கதை ஒடுக்கப்பட்ட புலையர் சாதியைச் சார்ந்த ஒருவனின் அறம் பற்றிப் பேசுகிறது. அவன் இறந்தபிறகும் வந்து நியாயம் கேட்க்கிறான். இல்லை என்றால் குருதி குடிக்காமல் விடமாண்டேன் என மிரட்டுகிறான். சிவனிடம் போய் வரம்வாங்கி வந்தவன். என்ன செய்ய முடியும்? நெய்விளக்கில் சத்தியம் செய்து இனிமேல் அடிமைவியாபாரம் பண்ணமாண்டேன் என சொன்னபிறகே, அவன் படையலுக்கு ஆறுதல் அடைவதாக ஒத்துக்கொள்கிறான். இப்பூவியில் இருக்கும் மனிதர்களின் ஆங்காரம், போபம், வடுக்கள் அவர்கள் மற...
ஒரு சினிமாபட இயக்குநர் - மாஸ்டர். அவருக்கும் சாமானியமான இக்காவிற்க்குமான ஒரு உறவு இந்த கதையில் மையமாக வருகிறது. ஜான் தன்னை புண்ணியவளானக மாறப்போவதாகவும், தான் இருக்கும் அறையில் ஜீன் இருப்பதாகவும் சொல்லி வைத்திருப்பான். ஜான் இறந்த பல நாட்க்கள் கழித்துக்கூட இழுத்தால் வந்துவிடும் பூட்டைத் திறக்காமல் வைத்திருப்பார். அவர்களுக்கு இடையேடயான உறவு என்பது நகைச்சுவையால் ஆனது. ஜான் நகைச்சுவை விளையாட்டுத்தனமானது. இக்காவின் நகைச்சுவை மாப்பிள்ளைத் தனமானது. கதை நடக்கும் பின்னனியை தெரிந்துகொண்டு படித்தால் கதை விரிவடையும் என நினைக்கிறேன். இக்கா, ஜான் போன்ற மனிதர்களைப் பார்ப்பது ஆபூர்வமானது. தூய உள்ளமும், இயற்க்கையான மனதும் உடையவர்கள். உண்மையில் கடவுளின் பிள்ளைகள் அவர்கள். ஒரு உயிருக்கும் ஒரு தன்மை இருக்கும். அப்படி உயிர்ன் தன்மையுடனே வாழ்வது ஒரு வரம். அந்த வரத்தை அவர்கள் பெற்றிருக்கிறார்கள். அதனால்தான் அவர்களைப் பார்த்தவுடன் நமக்கு மகிழ்ச்சியடையத் தோன்றுகிறது. ஜானின் கடைசி உலக பந்தத்தையும் தீயிட்டு எறித்துவிடுகிறான் கதை சொல்லி. அது நீலநிற ஹூரி இருந்தாள் என இக்காவிடம் சொல்கிறான். ந...
Comments
Post a Comment