Posts

Showing posts from June, 2017

பல்லவர்களின் பாதை – 1

Image
மழை பெய்ந்து ஓய்ந்த அடுத்த நாள், உச்சி வெய்யிலில் நண்பர்கள் ஐவர் மகேந்திரவாடியை நோக்கி இருசக்கர வாகனத்தில் கிளம்பினோம். தாம்பரத்திலிருந்து மண்ணிவாக்கம் வழியாக பெங்களூர் நெடுஞ்சாலையை திருப்பெரும்புதூரில் பிடித்தோம். கிட்டத்தட்ட நாற்ப்பது கி.மீட்டர் தூரம் அந்த சாலையிலேயே பயணித்தோம். காஞ்சிபுரத்தை இணைக்கும் சாலைக்கு அடுத்த கொஞ்ச நேரத்திலேயே வலதுபுறம் திரும்பி, கிராமப்புறச் சாலையின் வழி நகர முற்ப்படும் போதுதான் மதிய உணவைப் பற்றி எண்ணம் எழுந்தது. வேறு வழியின்றி நெற்க்கதிர்கள் பூத்துக்குலுங்கிய சாலையினூடே வாகனம் சீறிப்பாய்ந்தது. உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அனேகமாக எல்லோருக்கும் தலை வலிக்க ஆரம்பித்தது. பிள்ளையார்பட்டி கிராமத்தில் வண்டியை நிறுத்திவிட்டு, தண்ணீர்ப் பாட்டிலும், பிஸ்க்கட் பாக்கெட்டும் வாங்கி சாப்பிட்டோம். பக்கத்தில் ஹோட்டல் எங்கே என்று கேட்டதற்க்கு, இன்னும் மூன்று கி.மீட்டர் தூரத்தில் இருப்பதாக அங்கிருந்த விடலிகள் சொன்னனர். பிஸ்க்கட் வேண்டாமேன நண்பர் ஒருவர் இதைக் கேட்டு மறுத்துவிட்டார். கூகுள் மேப்தான் எங்களுக்கு வழிகாட்டி. மணப்பாக்கம் வந்ததும் சற்றே பெரிய ஊர் என்று தோ...