அவள் வருகைக்கு நன்றி

என்னுள்ளே இரவுகள் விடிவின்றி தவித்தது.

முழுநிலவு வருமென்று நினைத்தது பகடியானது.

வெண்மையும், நீலமுமாய் சேலை அணிந்து கொள்ளும் வானமொரு வஞ்சகன், கயவன்.

எப்போதும் நிலவை தான் மட்டும் சொந்தம் கொண்டாட வேண்டுமென்கிறான்.

கட்டுப்பாடுகள் சுக்குநூறானது.

சந்தனத்தை பாலில் உறைத்த வெண்மை என் மனதில் நிகழ்கிறது.

அய்யோ! பொங்கிவிடுமோ?

வானம் பொறமைப்படுகிறது.

படட்டும், எவ்வளவு கஷ்டப்படுத்தியிருக்கும்.

உச்சத்தில் மனம் தன்னை மறந்து ஆனந்தத்தில் கூத்தாடுகிறது.

நொடிப்பொழுதில் நிகழ்ந்த மாயம்.

இல்லை இல்லை. அது உண்மை. மந்திரத்திலேல்லாம் நம்பிக்கையில்லை.

ஒருவேளை அதனால் நடந்திருக்கும், நிகழாமலூம் போயிருக்கும்.

அவள் வருகைக்கு நன்றி.

Comments

Popular posts from this blog

குற்றமும், தண்டனையும்

கொடுக்கப்படவில்லை பறித்துக்கொள்ளப்பட்டது

பீடம் - அழியாத உணர்ச்சிகள் (ஜெயமோகனின் சிறுகதை)