Posts

Showing posts from December, 2015

வழிவழி ஓடி

Image
இரவும் பகலும் ஒன்றோடு ஒன்று குலவிக்கொண்டிருந்தது. சர்ச்சின் கடிகாரத்தில் உள்ள பெரிய முள் மணி பன்னிரண்டை தாண்ட முயன்றது ஆனால் சின்ன முள் என்னவோ ஆறில் சாவுகாசமாக அமர்ந்திருந்தது. நேற்றுப் பெய்த மழையில் வீதியெல்லாம் சிறு சிறு குட்டைகளாய் மாறியிருந்தது. நான் அவற்றைத் தாண்டியும், வளைந்தும் போகவேண்டியிருந்தது. ஸ்தோத்திர பாடல்கள் காதில் வந்து நிறைந்தது. எனக்கு முன்னே அவள் நடந்து கொண்டிருந்தாள், சில அடிகள் இடைவெளியிருக்கும். என்ன வடிவானவள் அவள். நடக்கும் போது ஒருவித நளினம், கூந்தல் ஆடும் நடனம், ஒருவித களிப்பை எனக்கு ஊட்டியது. யேய்..கொஞ்சம் நில்லு என்று சற்று உரத்த குரலில் கத்தினேன். தலையை திரும்பிப் பார்த்தாள். ஒரு போகம் சோகத்தை அறுவடை செய்ய போதுமான இரண்டு டிஎம்சி கண்ணீரை திறந்துவிட்டாள். மனம் பனிமூட்டத்தில் மாட்டிக்கொண்டது போலவும், கடலின் அடிஅழத்தில் சிக்கி வழிதெரியாமல் தவிப்பது போலவும், திக்கு தெரியாத காட்டில் மாட்டிக் கொண்டது போலவும், எதிலோமாட்டிக்கொண்டது போலவும் தவித்தது. துன்பம், பயம், கவலையால் கலந்த முகம் போல அவளது முக பாவனை எனக்குத் தோன்றியது. திடுமென அது கடுமையானதாய் மாறிப்போனத...