பதினைந்து வேலையாட்களை வைத்திருந்த குடும்பம் சோற்றுக்கு கஷ்டப்பட்டு சாகிறார்கள். அவர்களின் கதையிது. முதல் முதலில் கழுகை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியதன் மூலம் பிரபலம் அடையும் அவர்களின் தாத்தா ஏழு பெண்களை மணந்து கொண்டு பெரிய வீட்டைக் கட்டிக்கொள்கிறார். ஆனால் உலகம் மாறுகிறது, அவனது அப்பா இன்னும் கழுகை வாடகைக்கு விட்டு பிழைப்பதிலே இருக்கிறார். கழுகு வைத்திருப்பதே குற்றமேன சட்டம் வந்து, அவர் கைதாகியிருக்கிறார். இருந்தும் அவரும் டில்லியும் கழுகை நம்பியே இருக்கிறார்கள். முன் காலத்தில் பிரபலமாக இருந்த இயக்குநர், தற்ப்போது இறந்ததுகூட தெரியாமல், அவரின் உதவியை எதிரி பார்த்துக்கிடந்தனர்.
எப்படிப் பார்த்தாலும் அவர்கள் இன்னும் இறந்தகாலத்திலே இருக்கிறார்கள். அவர்கள் வெகுதூரம் வர வேண்டி இருக்கிறது. ஆனால் தோக்கி நிற்க்கும் கேள்வி, இப்படி மாறும் உலகத்தில் மாறதவர்களை ஏன் இப்படி தண்டிக்க வேண்டும்? கடந்த காலத்தில் வாழ்வது அப்படி என்ன பெரிய குற்றம்?
கழுகுகள் தன்னை வளர்த்தவன் இறந்துவிட்டான் எனத் தெரிந்ததும் அது அவரை தின்னவில்லை (அவை பசித்திருந்த போதும்). ஆனால் நைனா தான் இறந்த பிறகு இரண்டு நாள் அவைகளிடம் விட்டுவிட்டால், தின்னது போக மீதத்தை வைத்து காரியத்தைப் பண்ணச்சொல்லுவார். அவர் சொன்னது போலவே இரண்டு நாடகள் நைனா இறந்துகிடந்தும் அந்த கழுகுகள் அவரைத் தின்னவில்லை. கழுகுகளும் மாறாமல் இன்னும் அப்படியேதான் இருக்கிறது.
மாறதது எல்லாமும் அழிந்துபோகும்..அதனால் நெடுந்தூரம் வர வேண்டியிருக்கிறது. இது இப்படித்தான? இது சரியா என்ற கேள்வி மட்டும் இன்னும் மனதில் நின்று இருக்கிறது. நிச்சயம் இது அசோகமித்திரனின் சாயல் கொண்ட கதை.
Comments
Post a Comment