Skip to main content

அருகே கடல் - தன் இருண்ட புனைவுக்குள் சென்று கதவைச் சாத்திக்கொண்டான் -ஜெயமோகனின் கதை

 


கதாநாயகன் இருண்ட வீட்டிற்க்குள் அடைந்து கிடக்கிறான், உணவில்லாமல் புத்தகம் மட்டுமே துணையாக. வீட்டின் எல்லா ஓட்டைகளையும் அடைத்துவிடுகிறான் சாவி துவாரத்தை தவிர. அதன் வழியே கடல் உள்ளே வருகிறது. 

தலைகீழான கடல். அது  புனைவில் உருவான கடல். புத்தகங்களின் துணையுடன் அவன் உருவாக்கிக்கொண்டிருக்கும் புனைவு. அருகேதான் கடல் ஆனால் பார்ப்பதை தவிர்க்கிறான். அவன் புனைவில் உருவாக்கிய உலகம் இருள் நிறைந்த துன்பமான உலகம். அதனைவிட்டு வெளியே வரமுடியவில்லை அல்லது அதிலே திளைக்க அவனது மனம் விரும்பியது. புத்தகங்களை எறித்து தனக்கு உணவு சமைத்தவன். 

ஒருசமயம் வெளியே வரும் போது ஒளியாலான கடலைப் பார்க்கிறான். அவனுக்கு அது அதிர்ச்சியாக இருக்கிறது. தாங்கிக்கொள்ள முடியவில்லை. எலி எப்படி தன் பொந்துக்குள் சென்று அடைந்து கொள்ளுமோ அப்படி அவனும் ஓடிப்போய் தன் இருண்ட புனைவுக்குள் சென்று கதவைச் சாத்திக்கொண்டான்.

நிறைய படிமங்கள் உள்ள கதை. தலைகீழ் கடல், ஒளிநிறைந்த கடல், சாவி துவாரம்....... இன்னும் நிறைய முறை படிப்பதற்க்கு சாத்தியமுள்ள கதை. 


Comments

Popular posts from this blog

யாதும் காமமாகி நின்றாய்

எங்கோ சூரியன் தொலைந்து போய்க்கொண்டிருந்தான். நானும் தான். குவித்து வைத்த உள்ளங்கை போல ஏரியின் கரை கவிழ்ந்து கிடந்தது. அதன் கரையேல்லாம் காப்பிச் செடிகள் வளர்ந்திருந்தன. ஏரியின் நீர், கண்ணின் வெள்ளைப் பாவை போல தோன்றிற்று. முடிவிலா வானம் அந்த கண் வழியே தெரிந்தது. பச்சை நிற கண் இமைகளோ அந்த காப்பிச் செடிகள் என்று தோன்றிற்று. அது மலையின் கண், அதனாலோ என்னவோ இவ்வளவு பெரியதாய் நீண்டு கொண்டு போகிறது. தொலைதூரத்தில் ஆரம்பித்த வழி அந்த ஏரியை சுற்றி நாங்கள் தங்கியிருக்கும் பஞ்சாயத்து போர்ட் ஆபிஸ் கெஸ்ட் கவுஸ்ஸில் முட்டி நின்றது. பச்சை நிற மரங்கள் நிறைந்து கிடக்கும் மேகமலையில் அந்த ஒத்தை அடி பாதை மட்டும் வெள்ளை நிறத்தில் ஒரு கோடு போட்டது போல, நாங்கள் உட்காந்திருக்கும் மொட்டை மாடியில் இருந்து பார்க்கும் போது தெரிந்தது. நிச்சயமாய் அது நெற்றியில் இட்ட திருநீருதான். ஆனால் அது ஒரு எல்லைக் கோடு மாதிரியும் தோன்றிற்று. அதன் பின்னால் மலை உயர்ந்து கொண்டே போயிற்று.  அதுநாள் வரை காற்று அப்படி இனிக்கும்மென்று தெரியவில்லை. எத்தனை மலர்களை காற்று தழுவியிருக்கும், இலைகளில் இளைப்பாறியிருக்கும்?  சில சமயம் அவளது நான்

அமுதம்

  இது என்னில் மிக பாதிப்படைய வைத்த கதை. இதைப் பற்றி எழுத அல்லது தொகுத்துக்கொள்ள முடியவில்லை. காரணம் கதை பல தளங்களில் விரிந்து செல்கிறது. முதல் தளம் மற்றும் எனக்கு முக்கியமான தளம் என்பது காமம் சார்ந்தது. அன்னை ஒரு பக்கம் என்றால் மனைவி மறுபக்கம். இருவருக்கும் இடையில் இருக்கும் புள்ளி காமம் இல்லாத பூஞ்யம் என கொள்வோம். மனைவி பக்கம் வரவர காமத்தின் அளவு ஏறிக்கொண்டே போகிறது. மறு எல்லையில் அது கருணையாக/அன்பாக/பாசமாக ஏறிக்கொண்டே போகிறது. நன்றாக யோசித்துப்பார்த்தால் அடிநாதம் காமம்தான். மனைவி அன்னையாகும் தருணம் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆணின் மனம் குழம்பும். இவளை எந்த இடத்தில் வைப்பது? அன்னையின் பக்கமா இல்லை மனைவியின் பக்கமா? எல்லா ஆண்களிடமும் இருக்கும் இந்த பிரச்சனை. ஒருவேளை அன்னைக்கும் மனைவிக்குமான மனப்போரட்டமாகவே ஆணின் வாழ்க்கை முழுவதும் இருக்கும்(காமத்தைச் பொருத்தவரை). இரண்டாவது தளம் நேர்மறையான செயல்களை செய்பவர்கள் மேலான சந்தேகம். சாதாரண மனிதர்களுக்கு இந்த சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும். மனித மனம்  எளிதாக எதிர்மறையான விசயங்களை நோக்கி செல்லும். கருணை, தன்னை சமூகத்துக்காக சமர்பித்தல் போ

கழுமாடன் - அறம் கடவுளுக்கும் மேல் அல்லவா? (ஜெயமோகன் சிறுகதை)

  கழுமாடன் கதையும் பீடம் கதையும் ஒருவகையில் ஒடுக்கப்பட்டவர்கள் தெய்வமாவதுதான். தன்னுடைய கோபம், வடுக்களுடன் ஒருவன் இறந்துபோனால் அது அப்படியே அழிந்து போகாது. மனித உடல் மக்கிவிடும் ஆனால் அவனது எண்ணங்கள் அழியாது மாடனாக வந்து ரத்தம் கேட்க்கும். தன் அதிகார பலத்தால் மிரட்டி பணிய வைக்க முயலுகிறாள் உயர் குடி பெண். அதற்க்கு இணங்கவில்லை என்றால் நாயகனின் அம்மாவை கொன்றுவிடுவதாக மிரட்டுகிறாள். வேறு வழியில்லாமல் அவனும் ஒத்துக்கொள்கிறான். இருவரும் மாட்டிகொள்ளும் போது, அவள் கைப் பிடித்துவிட்டாதாகச் சொல்லி தப்பிக்கப்பார்க்கிறாள். நாயகனுக்கு கழுவேற்றம் தண்டனையாகிறது.  கதையில் இரண்டு அதிர்ச்சியுறும் இடம் வருகிறது. ஒன்று அந்த கழுவேற்றும் ஒத்திகை மற்றது நாயகன் குருவனிடம் தான் அவளைத் தொடவில்லை ஆனாலும் கழுவேறுகிறேன் என்கிறான். இதில் இரண்டாவது சம்பவம்தான் பெரும் அதிர்ச்சி அடையவைக்கிறது. செய்யாத குற்றத்திற்க்காக அவன் கழுவேற்றம் அடைகிறான். காரணம் அவன் புலையன்.  அந்த இழிநிலை தாங்காமல் அவன் மாடனாகி ரத்த பழி வாங்கத் துடிக்கிறான். பீடம் கதையில் வரும் மாடன் அவன். அவன் கேட்ப்பது ரத்தமில்லை, அறம். அறம் கடவுளுக்கும் மேல