கழுமாடன் கதையும் பீடம் கதையும் ஒருவகையில் ஒடுக்கப்பட்டவர்கள் தெய்வமாவதுதான். தன்னுடைய கோபம், வடுக்களுடன் ஒருவன் இறந்துபோனால் அது அப்படியே அழிந்து போகாது. மனித உடல் மக்கிவிடும் ஆனால் அவனது எண்ணங்கள் அழியாது மாடனாக வந்து ரத்தம் கேட்க்கும். தன் அதிகார பலத்தால் மிரட்டி பணிய வைக்க முயலுகிறாள் உயர் குடி பெண். அதற்க்கு இணங்கவில்லை என்றால் நாயகனின் அம்மாவை கொன்றுவிடுவதாக மிரட்டுகிறாள். வேறு வழியில்லாமல் அவனும் ஒத்துக்கொள்கிறான். இருவரும் மாட்டிகொள்ளும் போது, அவள் கைப் பிடித்துவிட்டாதாகச் சொல்லி தப்பிக்கப்பார்க்கிறாள். நாயகனுக்கு கழுவேற்றம் தண்டனையாகிறது. கதையில் இரண்டு அதிர்ச்சியுறும் இடம் வருகிறது. ஒன்று அந்த கழுவேற்றும் ஒத்திகை மற்றது நாயகன் குருவனிடம் தான் அவளைத் தொடவில்லை ஆனாலும் கழுவேறுகிறேன் என்கிறான். இதில் இரண்டாவது சம்பவம்தான் பெரும் அதிர்ச்சி அடையவைக்கிறது. செய்யாத குற்றத்திற்க்காக அவன் கழுவேற்றம் அடைகிறான். காரணம் அவன் புலையன். அந்த இழிநிலை தாங்காமல் அவன் மாடனாகி ரத்த பழி வாங்கத் துடிக்கிறான். பீடம் கதையில் வரும் மாடன் அவன். அவன் கேட்ப்பது ரத்தமில்லை, அறம். அறம் கடவுளுக்கும் மேல
நட்டைத் திருகி இந்த மனித வாழ்க்கைக்குள் மாட்டிக்கொள்கிறது குரங்கு. அப்படி அதை இவ்வாழ்க்கைக்குள் கொண்டுவருவது சரியா தவறா என்பதுதான் இக்கதையின் மைய்யக் கேள்வி. கதையின் நாயகனுக்கு அது சரியெனத் தோன்றுகிறது ஆனால் மற்றவர்களுக்கு அப்படித் தோன்றவில்லை. கதையில் ஒரு வித தத்துவத்தை பாமரத்தனமாக பேசும் ஒரு கதைமாந்தர் வந்து, நேரடியாக கதையில் மாந்தரிடம் விவாதிக்கிறது. அவனிடம் அதற்க்கு பதிலில்லாத போது திட்ட ஆரம்பிக்கிறான். கதை பகடியாகச் சென்றாலும், புராணங்கள் பற்றிய குறிப்புகளுடன் சென்று கொண்டிருக்கிறது. காடுகளை நோக்கி தவம் செய்ய முனிவர்கள் செல்கிறார்கள். பற்றுக்கொண்டதையெல்லாம் தவிர்ப்பதற்க்காக. ஆனால் பற்றுக்கொண்ட குரங்கு காட்டிலிருந்து நாட்டுக்கு வருகிறது. அப்படி வந்த முதல் குரங்கு தான் மனிதன். அறிதலில் இருக்கும் மகிழ்ச்சியை அறிந்துகொண்டது அது. அதற்க்கான சாவியை கொடுத்தபிறகு, தானாக அது பல இடங்களை திறந்துகொண்டு போகிறது. எல்லாவற்றையும் அறிந்துகொள்ள முயலும் போதுதான் நமக்கு வருகிறது ஞானதுக்கம். அதிலிருந்து வெளிவர மனிதன் பலகாலமு முயன்று வழியைக் கண்டு கொண்டிருக்கிறான். ஆனால் குரங்குக்கு அது சாத்தியமில்