எலுமிச்சை பழச்சாறு எனக்கு முன்னால் இருந்த மேஜையில் வைக்கப்பட்டிருந்தது. தாம்பராஸ் செய்தித்தாள் காற்றுக்கு ஆவலாய் எதனையோ எட்டிப்பார்த்தது. அதன் விதைகள் சாவுகாசமாக கோப்பையின் அடியில் குடித்தனம் நடத்த நகர்ந்த வண்ணம் இருந்தது. நடப்பதின் வீபரிதம் புரியாமல் பழச்சாறின் சக்கை நீச்சல் அடித்தது. ஆகமொத்தம் அந்த பழச்சாறு ஒரு குழம்பிப்போன குட்டை. மனதை ஒருவாறு தெளிவாக்கிக்கொண்டு தொண்டையை கனைத்தேன். வார்த்தைகள் வர மறுத்தது.
இரண்டு சிங்கங்கள் தங்க நிற புல்வெளியில் மாறிமாறி ஒன்றையொன்று அடித்துக் கொண்டது. கூந்தல் போல செம்பட்டை பிடரி மயிர் தொங்க, இரண்டு கால்களால் சண்டை போட்டது. மூக்கில் இரத்தம் கொட்ட, முடிவில் ஒரு சிங்கம் பின் வாங்கியது துரதிஷ்டம். வெற்றி பெற்ற சிங்கத்தின் கர்ச்சனை நான்கு பக்கமும் மாட்டி வைக்கப்பட்டிருந்த ஸ்பீக்கரின் வழி என் காதுகளை வந்தடைந்தது. ஒருவழியாய் போட்டி முடிவுக்கு வந்ததும். அது அதற்க்கெனவே காத்திருந்த பெண் சிங்கத்துடன் நகர ஆரம்பித்தது.
அனிமல் பிளனெட்டில் ஓடிக் கொண்டிருந்த இந்த காட்சி தாமஸ் வீட்டு தொலைக் காட்சியில் வந்தது. நான் சோபாவில் கால்களை தரையில் படுமாறு அழுத்தி உட்காந்திருந்தேன். எதிரே தாமஸ். அவருக்கு பின்னாலிருந்த வெளிர் மஞ்சள் நிற சுவரில், சிரிக்கும் மோனலிசா ஓவியம். என்னைப் பார்த்துதான் சிரிக்கிறதோ?
ஒரு கையால் டீவி ரிமொட்டை அழுத்தியவாறு, மறு கையில் செல்போனை வைத்து பார்த்துக்கொண்டிருந்தார். பிறகு வெறுமனே டீவியைப் பார்ப்பதுமாய், கால்களை ஆட்டிக்கொண்டும் இருந்தார் தாமஸ். ஆனால் மறந்துகூட என்னைப் பார்த்து விட மாண்டேன் என்றிருந்தார். நான் யாருடனோ பேசுவது மாதிரி மனதுக்குப்பட்டது. ஒருவகையான புறக்கணிப்போ என்றும் தோன்றியது. மதிக்காததனம். பணத்திமிர். இது எனக்கு ஒருவித எரிச்சலை உண்டுபண்ணியது.
மறுபடியும் தொண்டையை செறுமினேன். கவிழ்த்த தலையை நிமிர்த்தாமல் எனக்கு பக்கவாட்டு சோபாபில் அமர்ந்திருந்தால் சானு. அவளது எண்ண ஓட்டத்தை கணிக்க முடியாதபடி சிகை அவளுக்கும் எனக்கும் இடையே திரைச்சீலையானது. என் நிலைமை தர்மசங்கடமாய் தோன்றினாலும், நான் செய்வது சரியென்ரே தோன்றிற்று.
ம்.. சொல்லுங்க என்ன விஷயம்? என்றார் தாமஸ், குரலில் எந்தவித உணர்ச்சியும் இன்றி. பொதுவாக வேலைக்கு சிபாரிசு கேட்டு வரும் ஆயிரத்தில் ஒருவன் என நினைத்துவிட்டார் போலும். சானு சொல்லி கேள்விப்பட்டுயிருக்கிறேன்.
வலது பக்கம் சிறு நுழைவாயில் ஊடே பார்வை வீட்டிற்க்குள் போயிற்று. கும்மிருட்டால் எதுவும் அகப்படவில்லை. அதை ஒட்டினார் போல அலமாரியில் சில ஆங்கிலப் புத்தகம், வேதனைகளை தன்னுள்ளே இழுத்துக்கொள்ளுவது போல இருந்தது முப்பரிமான யேசு படம். மேல் அடுக்கில் இதயம் போன்ற வடிவத்திற்க்கு மேல் எண்கள் ஒட்டி வைக்கப்பட்டிருந்தன. முட்க்கள் அந்த இதயத்துக்குள் ஓடி, மணி ஏழு ஐம்பது எனக் காட்டியது. என் இதயத்துக்குள்ளும் முட்க்கள் ஓடுவது போல உணர்ந்தேன்.
உதடுகளை எச்சில்படுத்திக்கொண்டேன். மேகத்துக்குள் மறைந்து நிற்க்கும் நிலவைப்போல என் வார்த்தைகள் தெளிவின்றி வந்தது. நா.. சானுவ கல்யாணம் பன்னிக்கலாம்னு…. அவளும்…….வார்த்தைகள் அப்படியே நின்றுகொண்டது. அவரது தொப்பை மலைப் பாம்பைப் போல அசையாது கிடந்தது. ஆனால் தாமசின் சிறு அசைவால் டீசர்ட்டைத் தள்ளிக்கொண்டு வெளியே பார்த்தது. அதைப் பார்த்துத் தான் பேசினேன். சிவப்பு நிற பிரேம் போட்ட கண்ணாடிக்குள் கண்களை சுருக்கியவாறு, கோபக்கார நாய் எப்படி முகத்தை வைத்துக்கொள்ளுமோ அதைப் போல உதடுகளை விரித்து தன் பற்க்களைக் காட்டினார்.
வெளியே போட நாயே என்று கத்திவிட்டு, கையிலிருந்த ரிமொட்டை என்னை நோக்கி எறிந்தார். அது குறிதவறி பின் பக்கமுள்ள சுவரில் “டொம்மென” மோதி உடைந்தது.
ஸிட்.. ஸிட்.. ஸிட்.. கழுத்தை அறுத்த வெள்ளாடு போல தரையில் மூன்று முறை வலதுகாலால் உதைத்தார். ஒருவேளை அவர்க்கு நெற்றிக்கண் இருந்திருந்தால் கண்டிப்பாக சானுவுக்கு அப்புறம் என்னை எரித்திருப்பார். இப்படியெல்லாம் நடக்குமென்று தெரிந்துதான் அவள் தலையை கவிழ்ந்திருக்கிறாள் போலும். திட்டத்தான் போகிறார் என்று எண்ணியது தவறாகிப்போனது.
அடிவாங்கிய சிங்கம் முள் மறைவில் தன் காயங்களை நக்கியது. கேமிரா சற்று தூரத்துக்கு தூக்கப்பட்டதும் நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது. அரை நொடிக்கும் குறைவான நேரத்தில் பார்த்துவிட்டு தாமஸை உற்று நோக்கிணேன். கண்கள் சிவந்திருந்தது. எழுந்து உட்காருவது போல தோன்றிற்று, மூச்சு வாங்கினார். எனக்கு கழுத்து பக்கம் லேசாக வேர்த்திருந்தது. சானுவின் மழைத்துளிகளை நிலத்தில் பார்க்க முடிந்தது. எப்படியோ உண்ர்ச்சிகளை காட்டிவிட்டாள்.
தவறான ஆங்கில வார்த்தைகளை உபயோகப்படுத்தினார் பிறகு தன்னைத் தானே கட்டுப்படுத்திக்கொண்டார். மனிதன் கோபப்படும் போதுதான் அவன் வளர்ப்பு முறை புரிகிறது.
“ஆர் யு மேடு? கோ டு கெல்” தாங்கிகொள்ள முடியாதவறாய் தன் கைகளை சோபாபின் மேல் தட்டினார்.
ஆத்திரம் தாளாமல் நீயேல்லாம் மனுசனா? நாயே நாயே என அடித்தொண்டையிலிருந்து கத்தினார்.
இதுயெல்லாம் நடக்கும் என்று நினைத்துதான் வந்திருந்தேன் ஆனால் ஒருவித எரிச்சல் என் உடல் முழுவதும் பரவியது. சட்டென் பாய்ந்து என் கன்னத்தில் அறைந்தார். சானு பின்புறமாய் கட்டிப்பிடித்து அவரை என்னிடமிருந்து விலக்க முயன்றாள். அவர் திமிரியதால் எதிரே இருந்த சோபாவில் இருவரும் விழுந்தனர். சோபாவின் மேல் சானு, அவள் மடியில் தாமஸ்.
நினைவே வராதபடி ஒரு அறை. அவள் தன் இரு கன்னங்களையும் பிடித்துக்கொண்டாள். ஏணோ எனக்கு அவரை தடுக்க மனம் வரவில்லை.
காத்தாடி ஓடும் சத்தம், சானுவின் மெல்லிய விம்மல், சண்டையில் கிழே விழுந்து உருடும் பழச்சாறுக் கோப்பை, அனிமல் பிளனெட்டின் விளம்பரம், தாமஸின் கோப மூச்சு இதை தவிர வேறு எந்த சத்தமும் இன்றி இருந்தது அந்த அறை.
நீயெல்லாம் ஒரு மனுசனாடா? உன் கூடவா வந்து படுக்குற தினமும் இவ…ம் தலையை மேலும், கீழும் கேள்வி கேட்ப்பதை போல ஆட்டினார்.
உனக்கு அரிக்குதுனா, ஏன்டா எ வீட்டுல வந்து சொரிர…. “நாயே”, அந்த வார்த்தையால் அடிக்கடி திட்டினார்.
நான் சோபாவை விட்டு எழவே இல்லை. இதோ பாருங்க, நாங்க உங்கள மதிச்சு தா கேட்ட, நீங்க பதிலுக்கு இப்படி பேசறது சரியில்லை என்றேன்.
என்னடா மதிச்ச, மிதிச்சன்ட்டு….
தூ…வென துப்பினார். எச்சில் என் சட்டை மீது பட்டு சறுக்கிக்கொண்டு பாக்கெட்டுக்குள் சென்றது.
எரிச்சலும், கோபமும் தலைக்கு ஏறியது. உம் பொண்டாட்டிய ஒழுக்கமா வச்சிருந்தா, ஏ எங்கிட்ட வற்றா? கிட்டத்தட்ட கத்தியேவிட்டேன். கைகள் பற பறவென்றிருந்தது. சன்னதம் ஆடியவர்கள் போல, பேசுவது என்னவென்று தெரியாமல் உளறியேவிட்டேன். சற்று நொடிக்கு அப்புறம் தான் நான் சொன்ன வார்த்தையின் ஆழத்தை உணர்ந்து கொண்டேன். சட்டென சானுவை திரும்பிப் பார்த்தேன். அவள் முகம் சிவந்து கிடந்தது. அவளது பார்வை என்னை வெறுப்பதாய் தெரிந்தது.
ஆ.. நானா இந்த மாதிரி பேசினேன். இல்லை வேற யாராவது இப்படி பேச வைத்துவிட்டார்களா? கடவுளே..
நான் சொன்னதைக் கேட்டதும் அவர் கோபம் உச்ச நிலைக்கு வந்துவிட்டது. தாமஸ் சோபவிலிருந்து துள்ளி குதித்து, மேஜை மேல் விழுந்து என் சட்டைக் காலரைப் பிடித்தார். “ஐ வில் கில் யூ” என்று முகத்தறுகே கத்தினார். மற்ற வேளையாக இருந்தால் நான் அவரை அடித்து கீழே தள்ளி இருப்பது ஒன்றும் பிரமாதமில்லை ஆனால் இன்று அப்படி செய்யமுடியவில்லை. சற்று தள்ளினேன், அவர் மிக மூர்க்கமாய் இருந்ததால் முடியவில்லை. இருவரின் கணம் தாங்காமல் சோபாவிலிருந்து கீழே விழுந்தோம். என் இரு கைகளின் முட்டியும் நேரே தரையில் மோதி கடுமையான வழியை தந்தது, அதற்க்குள் என் முகத்தில் ஐந்தாறு அறை, நெஞ்சில் இரண்டு குத்து. நான் நிலைகுலைந்து தரையில் படுத்துவிட்டேன். அவர் மூச்சு வாங்குவது மட்டும் சத்தமாக கேட்டது. இந்த முறை சானு தடுக்க முன்வரவில்லை. சில நிமிடத்திற்க்குப் பின் சுதாரித்துக்கொண்டு மெதுவாக எழுந்து நின்றேன்.
எல்லாவற்றையும் இழந்தவர் மாதிரி சோபாவில் சாய்ந்தார். கழுத்தை மேல் நோக்கியவாறு காத்தாடியை பார்த்திருந்தார், கைகள் இரண்டையும் சோபவின் கை மேல் கிடத்தியவாறு. சானுவும் தரையில் கிடந்தாள்.
புதிதாய் ஒரு சத்தம். சத்ததைக் கேட்டு தலையை வலதுபுறம் திருப்பினேன். கதவைத் திறந்து கொண்டு நான்கு வயது மதிக்கதக்க சிறுவன் தாமஸை நோக்கி ஓடிவந்தது, அந்த அறைக்கதவிலிருந்து கசிந்த வெளிச்சத்தில் தெரிந்தது. நான் இன்னும் வாங்க போராடிக்கொண்டிருக்கும் உயர்தர மடி கனிணியில் கேம் ஓடியதை திறக்கப்பட்ட கதவின் இடைவெளிவழியாக பார்த்தேன்.
தலையை இடதுபுறம் திருப்புவதற்க்குள்ளாக, தாமஸின் மடியில் ஏறிவிட்டிருந்தான் அந்த சிறுவன்.
சானு தன் முகத்தில் வடிந்த கண்ணீரை துடைத்து தெரிந்தாள்.விம்மலை நிறுத்திவிட்டு. முகத்தை எதுவுமே நடக்காத மாதிரி மாற்ற முற்ப்பட்டாள்.
டாட் ஒய் மாம் இஸ் கிரைங்? முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு கேட்டான். தாமஸ் முகத்தில் எந்தவித சலனமும் இருக்கவில்லை. என்னைக் காட்டி, இவரு யாரு? என்றான் சட்டென.
நிமிர்ந்து உட்கார்ந்த தாமஸ், சிறுவனையும் என்னையும் மாறி மாறிப் பார்த்தார். பிறகு சானுவைப் பார்த்தார்.
சிறுவன் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தான். “செட் அப்” என கத்தினார். அவன் மிரண்டு போய், அழலாமா என யோசிப்பதை போல இருந்தது. பிறகு அவளை பார்த்தார் என்பதைவிட எரித்தார் என்பதே சரி. மறுபடியும் என்னையும் சிறுவனையும் மாறி மாறிப் பார்த்தார்.
இதழ்களில் வழிந்த இரத்ததை தன் புறங்கையால் துடைத்தாள், அது வலது கன்னங்களில் மீசை போல நீண்டு கொண்டது. தலைவிரிக் கோலத்தோடு, ருத்திரமாய் சட்டென எழுந்த சானு. குழந்தையை வாரி தன் இடது தோளில் சாய்த்துக்கொண்டு, படிதாண்டி வீட்டை விட்டு வெளியே போய்விட்டாள்.

Comments
Post a Comment