எலுமிச்சை பழச்சாறு எனக்கு முன்னால் இருந்த மேஜையில் வைக்கப்பட்டிருந்தது. தாம்பராஸ் செய்தித்தாள் காற்றுக்கு ஆவலாய் எதனையோ எட்டிப்பார்த்தது. அதன் விதைகள் சாவுகாசமாக கோப்பையின் அடியில் குடித்தனம் நடத்த நகர்ந்த வண்ணம் இருந்தது. நடப்பதின் வீபரிதம் புரியாமல் பழச்சாறின் சக்கை நீச்சல் அடித்தது. ஆகமொத்தம் அந்த பழச்சாறு ஒரு குழம்பிப்போன குட்டை. மனதை ஒருவாறு தெளிவாக்கிக்கொண்டு தொண்டையை கனைத்தேன். வார்த்தைகள் வர மறுத்தது. இரண்டு சிங்கங்கள் தங்க நிற புல்வெளியில் மாறிமாறி ஒன்றையொன்று அடித்துக் கொண்டது. கூந்தல் போல செம்பட்டை பிடரி மயிர் தொங்க, இரண்டு கால்களால் சண்டை போட்டது. மூக்கில் இரத்தம் கொட்ட, முடிவில் ஒரு சிங்கம் பின் வாங்கியது துரதிஷ்டம். வெற்றி பெற்ற சிங்கத்தின் கர்ச்சனை நான்கு பக்கமும் மாட்டி வைக்கப்பட்டிருந்த ஸ்பீக்கரின் வழி என் காதுகளை வந்தடைந்தது. ஒருவழியாய் போட்டி முடிவுக்கு வந்ததும். அது அதற்க்கெனவே காத்திருந்த பெண் சிங்கத்துடன் நகர ஆரம்பித்தது. அனிமல் பிளனெட்டில் ஓடிக் கொண்டிருந்த இந்த காட்சி தாமஸ் வீட்டு தொலைக் காட்சியில் வந்தது. நான் சோபாவில் கால்களை தரையில் படுமாறு அழுத்தி உட்கா...
எழுதுதல் ஒருவகை அறிதல் முறை, அதனால் எழுதுகிறேன்.