கதை சொல்லும் நிகழ்வினை நடத்த விரும்புகிறேன். கதை: சிலப்பதிகாரம். இடம்: சென்னை நாள்: இன்னும் முடிவாகவில்லை. பின்குறிப்பு: சங்ககால இலக்கியத்தை, இக்காலத்திற்க்கு ஏற்ப்ப கூறும் முறையை தேர்வு செய்து உள்ளேன். பங்குகொள்ள விரும்புவர்கள் தங்கள் விருப்பத்தை தெரிவிக்கவும், அதனை பொருத்து நிகழ்வினை உறுதி செய்யலாம். ஏன் கதை சொல்லுதல் முக்கியமாகிறது? கதை என்பது வெறும் கற்ப்பனை மட்டுமே என நினைப்பது தவறான எண்ணம். நம் வரலாறு, கலாச்சாரம் எல்லாவற்றையும் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல பயன்பட்ட கருவி கதை. சற்றே யோசித்தால் ஒரு விசயம் தெளிவாக விளங்கும், நம் பெற்றேருக்கு தெரிந்த அளவுக்கு நமக்கு நம் மண்ணைப் பற்றி தெரியாது. இன்னும் சொல்லப்போனால் மாபெரும் காப்பியங்களான இராமயாணமும், மகாபாரதமும் எழுத்தறிவில்லாத எத்தனையோ பெற்றோர்களுக்கு அத்துப்படி. எப்படி இதுவெல்லாம் சாத்தியமாயிற்று? கதை கேட்டலும், அதை சொல்லுதலும் தான் சாத்தியமாக்கியது. அப்படியானால் வரலாறு, கலாச்சாரம் ஏன் முக்கியமாகிறது? எந்த மனித சமூகமும் தனக்கென ஒரு வரலாறு, அதற்க்கான காலாச்