Skip to main content

முத்தமிட தடை செய்யப்பட்ட பகுதி


இது 1000வது தடவை. . நான் அவளை காதலிக்கிறேன் என்று சொல்வது. அலட்சியமான ஒரு
பார்வை, இன்னும் எத்தனை முறை தான் சொல்வது என்பது போல உதடுகள். அவளது முகமலர் இடதுபுறம் எங்கொ பார்த்துக் கொண்டிருந்தது. காபி கப் வைக்கப்பட்ட சத்தம் கேட்டுத்தான், காபி சாப்பில் இருக்கிறோம் என்ற நினைவே வந்தது.

காபி கப்பிலிருந்து ஆவி மெல்ல மேலே பறந்து, பின் ஒன்றையொன்று கட்டித் தழுவிக் கொண்டது. சுற்றுமுற்றும் பார்த்தேன். யாரும் எதையும் கவனிப்பதாய் தெரியவில்லை. இன்னும் அவைகள் தழுவிக் கொண்டுதான் இருந்தன.

காபி, புகை பிடித்துக் கொண்டிருந்தது.ஆணி அடித்த பலகையில் "புகை தடை செய்யப்பட்ட பகுதி" என்று எழுதியிருந்ததுஅவரவர் வந்த வேலையில் கண்ணும் கருத்துமாய் இருந்தனர்.

சிகை திரைச்சீலை போல, என் கண்களுக்கும் அவள் முகத்துக் இடையே விழுகிறது அடிக்கொருதரம். உணர்ச்சியை மறைத்துக் கொள்ளு(ல்லு)ம் புதிய முறையா? கைகள் வைப்பரைப் போல அடிக்கடி துடைத்துக் கொண்டே இருந்தது. அந்த மிருதுவான விரல்களை தொட வேண்டும் என எழுந்த ஆவலை அவளது விழிச்சுடரில் சுட்டு சூன்மாக்கினேன்.பேசுவாள் என எதிர்பார்ப்பது பேராசை. கடந்த கால வரலாறும் இதைதான் கூறிற்று. சுற்றி ஒரு முறை பார்த்தேன்.

சானு காபி என்று பெயர் சொற்க்களை மட்டும் தான் உச்சரித்தேன், வினைச் சொற்களைச் சொல்லி இன்னும் வினையைக் கட்டிக் கொள்ளும் முன்பே எழுந்து கொண்டாள். ஒருவேளை  பிடிக்கவில்லை போலும் காபியை. எனக்கு பிடித்திருந்தது. குடித்துக் கொண்டிருந்தேன், அவள் நடந்து கொண்டிருந்தால்.

கொஞ்ச தூரம் சென்றதும், திரும்பி என்னைப் பார்த்தால். சட்டென காபி கப்பை டேபிளில் வைத்தேன், அவள் பார்வை மற்றோருமுறை சுட்டுவிட்டது. காபி கூட பயந்து கப்பிலிருந்து பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது,என்னைச் சுட்டது. சட்டை மேல் விழுந்த காபி துளிகளை கையால் துடைக்க நேரமின்றி எழுந்து ஓடினேன். அவளைப் பற்றி புரிந்ததெல்லாம் புரியவில்லை, புரியாததெல்லாம் புரிந்து கொண்டேன். புரிந்ததும், புரியாததும் அடிக்கடி தனக்குள் குழப்பிக்கொள்ளும்.

அவளை நெருங்கவும், என்னை நேர்ரேதிர் பார்த்து அவள் நிற்கவும் மிகச் சரியாக இருந்தது. நிர்வாண உதடுகள் இடைக் கால நிவாரனம் தேடியது. வழங்கப்பட்டது நிவாரனம். ஆணி அடித்த பலகை தொம்மென விழுந்த சத்தால், நிவாரனம் நிறுத்தப்பட்டது. நான் சுற்றி எல்லோரையும் பார்த்தேன். இப்போது மட்டும் அனைவரும் என்னைப் பார்த்தனர். என் மனைவியை விடுத்து நான் மட்டும் எப்படி காபி குடிக்க, மனதுக்குள் கேட்டேன் எல்லோரையும் பார்த்து.
அவளுக்கு பிடித்திருக்கும் போல என்னையை. நேற்று நடந்த சண்டை முடிவுக்கு வந்தது தற்காலிகமாய். 300வது முறையாக முத்தத்தில் தொடங்கிணோம் எங்கள் ஊடலை.

 

Comments

Popular posts from this blog

குற்றமும், தண்டனையும்

இனிமேலும் சேர்ந்து வாழமுடியுமேன தோன்றவில்லை. வெறுப்பை உமிழும் அவள் கண்கள் ஞாபகத்திற்க்கு வந்தது. ஒருவித ஈர்ப்பையும், அன்பையும் சொறிந்த அதே கண்கள்தான் நான்கு வருட திருமணத்திற்க்கு பிறகு இப்படி மாறிப் போனது. எனக்கு விருப்பம் இருக்கிறதோ இல்லையோ நான் பல காரியங்களை அம்மா, அப்பாவின் ஆசைக்காகவே பண்ணியிருக்கிறேன். அதில் கல்யாணமும் ஒன்று. சொல்லப்போனால் எனக்கு இஷ்டமே இல்லை. ஒன்றை மறுக்கும் போதேல்லாம், அதைச் செய்தாக வேண்டி வற்புறுத்தப்பட்டிருக்கிறேன். பள்ளிக்கூடம் போவது, வேலைக்கு போவது என அதன் பட்டியல் நீளும். யாருக்காக இதைச் செய்கிறேன் என்று சத்தியமாக விளங்கவில்லை?  ஆனால் அது அம்மா, அப்பாவின் விருப்பம். ஏன் அது அவர்கள் விருப்பமானது என எனக்கு தெரியாது. காற்றடிக்கும் திசையில் மேகங்கள் போவதைப் போல நானும் மற்றவர்களைப் போல நகர நிர்பந்திக்கப்பட்டேன். புதிதில் இருக்கும் கவர்ச்சியும், சுவாரஸ்யமும் என்னை சில நாட்க்கள் கட்டிப்போட்டது என்னவோ உண்மைதான். தேக்கிவைக்கப்பட்ட அணையின் நீர் மட்டம் எப்படி வரவு இல்லை என்றால் வடிந்து இல்லாமல் ஆகுமோ அதே போலதான்  அந்த கவர்ச்சியும், சுவாரஸ்யமும் ஆனது. பாடியிலிருக்கும

கொடுக்கப்படவில்லை பறித்துக்கொள்ளப்பட்டது

இடப்பக்கம் நீண்ட சாலை, அதன் முழுவதும் யாரோ மலர்களை கொட்டி வைத்திருந்தனர். ஒருவேளை இருபுறமும் வளர்ந்து நிற்க்கும் மரங்களின் வேளையாய் இருக்கும். எவரும் அதில் பயணம் மேற்க்கொண்டதில்லை என்று சொல்கிறதா அந்த மலர்கள்?  இல்லை யாரையேனும் வரவேற்க்க காத்திருக்கிறதா? தெரியவில்லை. அது சாலையா இல்லை சோலையா? விழிகள் மெதுவாய் நடை போட்டது. வெண்ணிற கொடியில் சிவப்பு நிற இதயம் ஏற்றப்பட்டிருந்தது.பூக்கள் கொடிக்கம்பத்தின் காலடியில் கிடந்தன. இதயத்திலிருந்து வழிகிற குருதி அந்நிறத்தையே கொடுத்திருக்குமோ? எனக்கு நேர்ரேதிரே அந்த கொடிக்கம்பம். காற்றினால் இதயம் பறந்து கொண்டிருந்தது. குவிந்த உள்ளங்கை போன்றே இருந்தது அந்த ஏரி. கிணற்றில் நீரை சேந்துவது போல் வானம் நீரை திருடிக் கொண்டிருந்தது. உள்ளங்கை சரிவு போல உள்ள அதன் பள்ளத்தாக்கில் காப்பிச் செடிகள். காபிச் செடிகளுக்கு நடுவே ஆழகிய ஏரி அமர்ந்திருந்தது. மோட்சம் கிடைத்தால், நீர் கூட ஆவியாகித்தான் வானுலகம் செல்ல வேண்டும் போல. மோட்சம் கிடைத்த நீர், காபிச் செடியில் அப்போது தான் வெளிவந்த இளந்தளிரை தடவிச் சென்றது. இளந்தளிர் மேல் சிறு துளி கண்ணீர். நீண்

கழுமாடன் - அறம் கடவுளுக்கும் மேல் அல்லவா? (ஜெயமோகன் சிறுகதை)

  கழுமாடன் கதையும் பீடம் கதையும் ஒருவகையில் ஒடுக்கப்பட்டவர்கள் தெய்வமாவதுதான். தன்னுடைய கோபம், வடுக்களுடன் ஒருவன் இறந்துபோனால் அது அப்படியே அழிந்து போகாது. மனித உடல் மக்கிவிடும் ஆனால் அவனது எண்ணங்கள் அழியாது மாடனாக வந்து ரத்தம் கேட்க்கும். தன் அதிகார பலத்தால் மிரட்டி பணிய வைக்க முயலுகிறாள் உயர் குடி பெண். அதற்க்கு இணங்கவில்லை என்றால் நாயகனின் அம்மாவை கொன்றுவிடுவதாக மிரட்டுகிறாள். வேறு வழியில்லாமல் அவனும் ஒத்துக்கொள்கிறான். இருவரும் மாட்டிகொள்ளும் போது, அவள் கைப் பிடித்துவிட்டாதாகச் சொல்லி தப்பிக்கப்பார்க்கிறாள். நாயகனுக்கு கழுவேற்றம் தண்டனையாகிறது.  கதையில் இரண்டு அதிர்ச்சியுறும் இடம் வருகிறது. ஒன்று அந்த கழுவேற்றும் ஒத்திகை மற்றது நாயகன் குருவனிடம் தான் அவளைத் தொடவில்லை ஆனாலும் கழுவேறுகிறேன் என்கிறான். இதில் இரண்டாவது சம்பவம்தான் பெரும் அதிர்ச்சி அடையவைக்கிறது. செய்யாத குற்றத்திற்க்காக அவன் கழுவேற்றம் அடைகிறான். காரணம் அவன் புலையன்.  அந்த இழிநிலை தாங்காமல் அவன் மாடனாகி ரத்த பழி வாங்கத் துடிக்கிறான். பீடம் கதையில் வரும் மாடன் அவன். அவன் கேட்ப்பது ரத்தமில்லை, அறம். அறம் கடவுளுக்கும் மேல