Wednesday, June 1, 2016

வெண்தோடு

எங்கோ சூரியன் தொலைந்து போய்க்கொண்டிருந்தான். நானும் தான். குவித்து வைத்த உள்ளங்கை போல ஏரியின் கரை கவிழ்ந்து கிடந்தது. அதன் கரையேல்லாம் காப்பிச் செடிகள் வளர்ந்திருந்தன. ஏரியின் நீர், கண்ணின் வெள்ளைப் பாவை போல தோன்றிற்று. முடிவிலா வானம் அந்த கண் வழியே தெரிந்தது. பச்சை நிற கண் இமைகளோ அந்த காப்பிச் செடிகள் என்று தோன்றிற்று. அது மலையின் கண், அதனாலோ என்னவோ இவ்வளவு பெரியதாய் நீண்டு கொண்டு போகிறது. தொலைதூரத்தில் ஆரம்பித்த வழி அந்த ஏரியை சுற்றி நாங்கள் தங்கியிருக்கும் பஞ்சாயத்து போர்ட் ஆபிஸ் கெஸ்ட் கவுஸ்ஸில் முட்டி நின்றது. பச்சை நிற மரங்கள் நிறைந்து கிடக்கும் மேகமலையில் அந்த ஒத்தை அடி பாதை மட்டும் வெள்ளை நிறத்தில் ஒரு கோடு போட்டது போல, நாங்கள் உட்காந்திருக்கும் மொட்டை மாடியில் இருந்து பார்க்கும் போது தெரிந்தது. நிச்சயமாய் அது நெற்றியில் இட்ட திருமண்தான். ஆனால் அது ஒரு எல்லைக் கோடு மாதிரியும் தோன்றிற்று. அதன் பின்னால் மலை உயர்ந்து கொண்டே போயிற்று.  அதுநாள் வரை காற்று அப்படி இனிக்கும்மென்று தெரியவில்லை. எத்தனை மலர்களை காற்று தழுவியிருக்கும், இலைகளில் இளைப்பாறியிருக்கும்?
 சில சமயம் அவளது நான்கு முடியை ஆட்டி என் மேல் மோத வைக்கும், அவள் விலக்கிவிடுவாள். சுற்றிக்கொண்டு போய் துப்பட்டாவை தூக்கி அடிக்கும், இழுத்துவிடுவாள். சட்டென ஓடிவிடும். எதிர்பாரத நேரத்தில் முடிகள் அனைத்தையும் வாரி என் மேல் வீசும். கருந்திரை இருவரது முகத்தையும் மூடிவிட்டது. பையாஸ்கோப்பில் புகைப்படத்தை சின்ன வயதில் பார்ப்பது போலயிருந்தது, சிகையினுடே அவளது முகம். வெட்க்கத்தில் விளைந்த புன்னகை அவளது இதழ்களில் பரவியது. மனதுக்குள்ளே அந்த புன்னகை அமர்ந்துகொண்டு, என் மனதை தொண்டி தொண்டி மகிழ்ச்சியை எடுத்துக்கொண்டு இருந்தது. எங்கிருந்து வந்தது இவ்வளவு ஆனந்தம்? என்னுள்ளே தூங்கிக்கிடந்திருக்குமோ? சிகையை இரு கரங்களால் வளைத்து அவள் தலையின் பின் சேர்தேன். காது மடலுக்குள் அந்த நான்கு முடியை சொறுகிவிடுவதில் அவளுக்கு என்ன சந்தோஹம் என்று தெரியவில்லை? கொஞ்ச நேரம் அவளது தலையை பிடித்துக்கொண்டு மயாஜாலம் காட்டும் கண்களின் இரகசியத்தை கண்டுபிடிக்க முயன்றுகொண்டிருந்தேன். ம்கூம்….நிரபராதி போல அந்த கண்கள் நடித்தது. முதலில் நானும் அப்படித்தான் நினைத்தேன் ஆனால் அது உண்மையில்லை. ஒவ்வொறு முறையும் ஆராய முயலும் போது, எனது இருப்பை மறந்து தொலைந்து போவேன். பிறகுதான் தொலைந்து போனதன் நினைவே வரும். நீதிமன்றத்தில் உண்மை தெரிந்த இருவர் எதிர் எதிர் கூண்டில் நிற்க்கும் போது, உண்மை வாதடப்படும். ஆராயப்படும். நான் நீதிபதி ஆகும் போதெல்லாம் உண்மை மறந்துபோகிறது. சாட்சிக் கூண்டுக்குள் வந்தால் தெரிகிறது. அசையும் கற்ப்பாறை அவள் தலைக்கு மேல் தெரிந்தது.
அங்க பாரு யானைக் கூட்டம், என்றேன்.
அவள் தலையை திருப்பி, மலைக்கு மேலே நின்ற கூட்டத்தை பார்த்தாள். சில யானை மரங்களை உடைத்துப் போட்டது. கைகளை நீட்டி ஆமாம்.ஆமாம் என்றாள்.
இருளேனும் கற்ப்பப்பை பூமியை தினந்தோறும் காலை வேளையில் செனிக்க வைக்கிறது. மலையிலிருந்து சூரியன் தற்க்கொலை செய்வது போல தோன்றிற்று. கற்ப்பப்பை மலையிலிருக்கும் ஒவ்வொரு மரமாய் விழுங்கிகொண்டு போனது. கடைசியாய் நாங்களிருந்த கெஸ்ட் கவுஸ்சும், திருப்பிப் பார்ப்பதற்க்குள் மலை முழுவதும் அதனுள். மிக விரைவாக இருட்டிவிட்டது.
கார்த்திக் என்று அழைத்துக்கொண்டே என் தோள் மேல் சாய்ந்து கொண்டாள்.
காற்று என் மீது இருக்கும் போது எப்படி இருக்குமோ அப்படித்தான் இருந்தது. ம்.. என்றேன். ஒரு வித சங்கிதமாய் அந்த இரவில் கேட்டது.
நா ரொம்ப சந்தோஹமா இருக்கேன் என்றாள்.
அவள் தோள் மேல் கை வைக்கலாமா என்று யோசித்துக்கொண்டிக்கும் போது இந்த கேள்வியைக் கேட்டாள். எனக்கு என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை. நானும் ரொம்ப சந்தோஹமாதா இருக்கேன் என்றேன் பதிலுக்கு.
நிலவு மெதுவாக ஊர்ந்துகொண்டு வந்தது. வானம் மேகத்தை போர்வையை போல அடிக்கடி இழுத்துப் போர்த்திக்கொண்டுவிட்டது. நல்ல குளிர ஆரம்பித்திருந்தது. இரவு பூச்சிகள் பாட தொடங்கியது.    
நாம இந்த உலகத்தை விட்டு எங்கோ வெகு தொலைவில் இருக்கறமாதிரியும், நீயும் நானும் மட்டும் தனியா இருக்கறமாதிரியும் தோணுது. என்னால சந்தோஹத்த தாங்கிக்க முடியல. அவள் கண்களின் ஓரம் லேசாக கண்ணீர் வழிந்தது.
திடுமென போன் பண்ணி, நாம எங்கோயவாது போலாம் என்றாள். சரி மாயாஜால் போலாம் என்றேன்.
இல்லைபா.. எங்கயாவது ஒரு மூனு நாள், நாலு நாள் போலாம். மனசு சரியில்லனா. சுந்தர்தா மேகமலைய பத்தி சொன்னான். வழியேல்லாம் மோசம். ஓருவழியா வந்து சேர்ந்ததுக்கு அப்புறம்தான் தெரிந்தது ஓட்டலே இல்லைனு. எப்படியோ இங்க இடம் கிடச்சுச்சு. ஆபிஸ்க்காக முன்னாடி சின்ன பில்டிங், அதுக்கு பின்னாடி இரண்டு மாடில கெஸ்ட் கவுஸ். நாங்க தங்கின ஒரு ரூம தவிர மீதியெல்லாம் காலியாத கிடந்துச்சு.
ஆற்றில் அடித்த பொருளைப் போல துப்பட்டாவை காற்று அடித்து தூக்கி தரையில் வீசியது. அவள் அதைப் பற்றி கவலை அற்றிருந்தாள்.
கைகளை வளைத்து அவள் கழுத்தை சுற்றிக்கொண்டேன். நான்கு முடியை இந்த முறை நான் விலக்கி, அவள் காதறுகே இரகசியம் சொன்னேன். நீ தேவதை, இந்த மலைகளுக்கும், காற்றுக்கும், மரங்களுக்கும், ஏன் இந்த காட்டுக்கே.
அவ்வளவுதானா? என்றாள்.
எனக்கும். அவள் சிரித்தாள். மது தேடிய வண்டு போல நான் அவள் இதழ்களை முத்தமிட்டேன். ஆமாம் இனம் இனத்தோடுதானே சேறும்.
சார்… தோசை ரெடி. குரிசு வந்து நின்றிருந்தான்.
நான் அவளது இதழ்களிலிருந்து, எனதை பிரித்தேன். அவன் பார்வை துப்பாட்டா இல்லாத மார்பகங்களை முறைத்தது.
அவள் திரும்பி துப்பட்டாவை துலவினாள். நான், சரி வற்றேன் நீங்க போங்க என்றான்.
ஆனால் அவன் சற்று தாமதித்துதான் சென்றான்.

         

Wednesday, May 25, 2016

சிலப்பதிகாரம் கதை சொல்லும் நிகழ்ச்சிநிரல்

தேதி: 05.06.2016
நாள்: ஞாயிறு
இடம்: கேம்ப் ரோடு.


நிகழ்ச்சி நிரல்
பகுதி 1: அறிமுகம்
அ.கதை சொல்லுவது ஏன் முக்கியம்?
ஆ.இலக்கியம் என்றால் என்ன?
இ. மரபுக் கவிதை ஒரு விவாதம்
ஈ. சிலப்பதிகாரம் ஓர் அறிமுகம்.
உ.விவாதம்
பகுதி 2: புகார் காண்டம்
பகுதி 3 :மதுரைக் காண்டம்
பகுதி 4 : வஞ்சிக் காண்டம்
பகுதி 5 : இறுதி விவாதம்.
நேரத்தை சரியாக வரையறுக்கமுடியவில்லை.
அதிகபட்சமாக 5 மணி நேரம்.

Sunday, May 22, 2016

கதை சொல்லும் நிகழ்வினை நடத்த விரும்புகிறேன்.


கதை சொல்லும் நிகழ்வினை நடத்த விரும்புகிறேன்.
கதை: சிலப்பதிகாரம்.                                இடம்: சென்னை

நாள்: இன்னும்  முடிவாகவில்லை.

பின்குறிப்பு:   சங்ககால இலக்கியத்தை, இக்காலத்திற்க்கு ஏற்ப்ப கூறும் முறையை தேர்வு செய்து உள்ளேன்.

பங்குகொள்ள விரும்புவர்கள் தங்கள் விருப்பத்தை தெரிவிக்கவும், அதனை பொருத்து நிகழ்வினை உறுதி செய்யலாம்.

ஏன் கதை சொல்லுதல் முக்கியமாகிறது?

கதை என்பது வெறும் கற்ப்பனை மட்டுமே என நினைப்பது தவறான எண்ணம். நம் வரலாறு, கலாச்சாரம் எல்லாவற்றையும் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல பயன்பட்ட கருவி கதை.
சற்றே யோசித்தால் ஒரு விசயம் தெளிவாக விளங்கும், நம் பெற்றேருக்கு தெரிந்த அளவுக்கு நமக்கு நம் மண்ணைப் பற்றி தெரியாது. இன்னும் சொல்லப்போனால் மாபெரும் காப்பியங்களான இராமயாணமும், மகாபாரதமும் எழுத்தறிவில்லாத எத்தனையோ பெற்றோர்களுக்கு அத்துப்படி. எப்படி இதுவெல்லாம் சாத்தியமாயிற்று? கதை கேட்டலும், அதை சொல்லுதலும் தான் சாத்தியமாக்கியது.

அப்படியானால் வரலாறு, கலாச்சாரம் ஏன் முக்கியமாகிறது?

எந்த மனித சமூகமும் தனக்கென ஒரு வரலாறு, அதற்க்கான காலாச்சாரத்தையும் கொண்டிருக்கிறது. இது ஒன்றும் நேற்றோ முந்தையநாளோ வந்தது இல்லை. தலைமுறை தலைமுறையாக இது தொடர்ந்து வருகிற ஒன்று. அப்படியானால் ஒரு சமூகம் இதை மறந்தால் என்ன? இத்தனை நாளாக அவர் முன்னோர்கள் திரட்டி வந்த அறிவு, தனித்தன்மை அனைத்தும் அத்தோடு அழிந்து போகும். பின்னர் நாம் எந்தவித பிடிப்பும் இல்லாத தனிச்சமூகமாக நிற்க்க வேண்டிவரும். தனக்கான எந்தவித சொந்த படைப்பையும் உருவாக்க முடியாத நிலைவரும். தனித்தன்மை என்பது முக முக்கியமான ஒன்று.
“யாதும் ஊரே, யாவரும் கேளீர்” என்பது சங்க்காலப் பாடல்.
 என்னதான் சொல்லவருகிறது?
 எல்லா நல்ல கேட்டுக்குங்க, உலகத்துல இருக்கிற ஊர் எல்லாம் என்னோட ஊர் தான்.
அப்படீனா?
உலகத்திலுள்ள எல்லோரும் சம்மானவர்கள் அதனால் எல்லா ஊரும் எனது ஊர் ஆகிறது. இந்த கருத்து சுமார் மூன்று ஆயிரம் நூற்றாண்டுகளுக்கு முன்னால் நம் முன்னோர்கள் சொன்னது. இதை இன்னும் மேலை நாடுகளால் உதட்டளவில் மட்டும் ஒத்துப்போக முடிகிற காரியம், ஆனால் மனதளவில் முடியவில்லை. இருந்தும் நம் கலாச்சாரம், எந்த மண்ணில் எல்லாம் மற்ற மதத்தவர்களுக்கு இடமில்லை என்று அனுப்பியபோதும், இந்தியா மட்டும் இடம் தந்தது வரலாறு.
இந்தியா வல்லராசாக போகிற காலம் நெருங்கிவருகிற சூழல். அதனால் நம் காலச்சாரத்தைப் பற்றிய பிரஞ்ஞை முக்கியமாகிறது. தெரிந்துகொண்டால் தான் நாம் தனித்தன்மை கொண்டவர்களாக இருக்கமுடியும். புதுவிதமான மாற்றத்தை இந்த உலகத்துக்கு தர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதனால் வெள்ளைக்காரனை காப்பி அடித்தது போதும்.     

Tuesday, May 10, 2016

திரி

திரி கொழுத்தப்பட்ட பட்டாசு
வெடித்தால்,
வண்ண ஓவியங்களாய் மலர்வாள்
ஆனால் வெடிச்சத்தம் மட்டும் உள்ளேதான்.
வெடிக்காவிடில்,
எப்படியும் கொஞ்ச நேரத்தில் நடக்கும்.
காதல் திரி கொழுத்தப்பட்ட பட்டாசு.

Friday, April 15, 2016

கம்பராமயாணம் - இருவினை வெள்ளம்

முல்லையைக் குறிஞ்சி ஆக்கி,
   மருதத்தை முல்லை ஆக்கி,
புல்லிய நெய்தல்தன்னைப் பெரு
   அரு மருதம் ஆக்கி,
எல்லையில் பொருள்கள் எல்லாம்
   இடை தடுமாறும் நீரால்,
செல்லுறு கதியின் செல்லும்வினை
   என, சென்றது அன்றே
.

முல்லை நிலத்தை குறிஞ்சி
நிலமாக்கியும்;  மருத நிலத்தை முல்லை நிலமாகச்   செய்தும்;புன்புலமாகிய
நெய்தல்  நிலத்தை; நிகரில்லாத மருத நிலமாகச்  செய்தும்; (பல்வேறு
நிலங்களின்)  அளவற்ற   பண்டங்களை  யெல்லாம்; தத்தம் இடத்தை விட்டு  வேறு நிலத்துக்குக் கொண்டு செல்லும்
தன்மையால்; செலுத்தப்படுகின்ற
போக்கிலே   இழுத்துப்  போகின்ற; இருவினைகள் போல (அந்த வெள்ளம்) சென்றது.

பொதுவாக கவிதைகளை அல்லது இலக்கியங்களை படிக்கும் போது, அவற்றை சுருக்கக்கூடாது. அவைகள் வெடிகுண்டைப் போல. விழுந்ததும் வெடித்து சிதறி பெருக வேண்டும். தொடர்ந்து கவிதைகளைப் பற்றி சிந்திப்பதால் அது சாத்தியப்படும். 

நாம் செயய்யும் செயலால் தொடர்ந்து நம் நிலைகள் உயர்ந்து தெய்வ நிலையை அடையலாம் அல்லது நேர்மாறாகவும் நடக்கலாம். அது நம் செயலைப் பொறுத்தது. இங்கு நதியை வினையோடு பொறுத்தியது மிக அற்ப்புதம். குறிஞ்சியோ, முல்லையோ எந்த வித நிலத்தின் பொருளும் கடலைச் செறுவதில் எந்த பிரச்சனையும் இல்லை. அது போல மனிதன் எல்லா வழிகளிலூம் ( பக்தி, ஞான இன்னும் வேறு மார்க்கங்களில்) கடவுளை அடையலாம். எல்லா விதமான வேற்றுமைகளும் ஏற்று கொள்ளப்படும். இங்குதான் இந்தியாவின் மையபுள்ளி ஆரம்பிக்கிறது. அதுதான் விடுதலை. இன்னும் கற்ப்பனையை விரித்தால் விளங்கும்.

Thursday, April 14, 2016

கம்பராமயாணம் -மழைத் தாரையின் தோற்றம்

.
புள்ளி மால் வரை பொன் எனல் நோக்கி, வான்,
வெள்ளி வீழ் இடை வீழ்த்தெனத் தாரைகள்,
உள்ளி உள்ள எல்லாம் உவந்து ஈயும் அவ்
வள்ளியோரின், வழங்கின
-மேகமே.

புள்ளி மால் என்பது இமையமலை. அது பொன் போல இருந்தது. வானோர் அதனை அடையும் பொருட்டு வெள்ளி விழுதுகளை மலைகளுக்கு இடையே செலுத்தினர். பனிமலையான இமையமலை மீது மாலை சூரிய கதிர்கள் பட்டு பொண் போல மின்னும். மேகங்கள் பனியை கொட்டும். அதைக் கண்டு கவிஞன் தன் கற்ப்பனையை விரிக்கிறான்.

இங்கு கற்ப்பனையை விரித்தல் என்பது மிக முக்கியமான ஒன்று. இதற்க்கு சிறந்த உதாரணம் குழந்தைகள். சின்ன டப்பாவை குக்கராகவும், மண்ணை சோறாகவும் கற்ப்பனை செய்துகொள்கிறது, பின்பு அதே மண்ணை குழப்பாக மாற்றி கொள்கிறது. ஆனால் நாம் அன்றாட வாழ்வில் அதனை தொலைத்து கொண்டிருக்கிறோம். இயந்திரமானோம். சற்று சிந்தித்தால் விளங்கும்.







Wednesday, April 13, 2016

கம்பராமாயணம் -விலை மகளிர் : வெள்ளம்


தலையும் ஆகமும் தாளும் தழீஇ, அதன்
நிலை நிலாது, இறை நின்றது போலவே,
மலையின் உள்ள எலாம் கொண்டு மண்டலால்
விலையின் மாதரை ஒத்தது - அவ் வெள்ளமே.
 
விளக்கம் :
விலை    மாதர்     காமுகரது
பொருள்களைக்  கவருமளவும்  அவர்களைத் தழுவிக்     காண்டிருந்து,
கவர்ந்தவாஎறே   விரைவில்  விட்டு  நீங்குதல்  போல,    வெள்ளமும்
மலையில்  உள்ள  பொருள்களை  யெல்லாம் வாரிக்   கொள்ளுமளவும்
மலையைத்  தழுவிக்  கொண்டிருந்தது.  வாரிக் கொண்டவாறே   விட்டு
நீங்கிற்று’ எனச் சிலேடை விளக்கம் தருவர் காஞ்சி இராமசாமி நாயுடு.

கம்பனை புரிந்து கொள்ள சில முயற்சியை முன் வைக்கிறேன். 

இந்த கவிதையை படித்த எல்லோருக்கும் வரும் சந்தேகம், எப்படி மலையில் ஓடும் வெள்ளத்தை விலை மாதரோடு ஒப்பிடலாம்? வெள்ளம் என்பது புனிதமானது, உயிர்களை செனிக்க வைக்கிறது. ஏன் நதிக்கரை ஓரம்தான் நாகரிகம் தோன்றி, வளர்ந்தது. அப்படியிருக்க இது தவறான ஒப்பிடா? 
எப்போதுமே ஒரு ஒப்பீடுக்கு சென்றால் அதன் காலகட்டத்தை கணக்கில் கொள்ள வேண்டும். இல்லை என்றால் தவறான சித்திரம்தான் கிட்டும். நம் கணக்குப்படி வெள்ளம் என்பது வளத்தை குறிக்கிறது. அதே போல் காமம் என்பதும் வளத்தை சுட்டும் ஒரு குறீயீடாக பயன்படுத்தப்பட்டது. உயிர்கள் செனிப்பதற்க்கான காரணமே அதுதான். அந்த காலத்தில் காமத்தை போற்றி  பாடினர், சிலை வடித்தனர். இதன் பொருட்டு கம்பன் விலை மகளிரையும், வெள்ளத்தையும் இணைத்து கவிதை படித்தான். 

சற்று உங்கள் சிந்தனைகளை வளரவிட்டு யோசிங்கள், ஏன் கோவிலில் நிர்வான சிலைகள் இருக்கிறதேன்பது விளங்கும். 


பிச்சைப் பாத்திரம்

  குறிப்பு : மகேந்திரவர்ம பல்லவன் எழுதிய மத்தவிலாச பிரகசனம் என்னும் அங்கத நாடகத்தை தழுவி எழுதப்பட்ட சிறுகதையிது. எழுத்தாளன் என்ற முறையில் கத...